Socialize

அப்பிள் நிறுவனம் தொழில் நுட்ப ‘திருட்டு’ நஷ்ட ஈட்டை கட்டச் சொல்கின்றது


அப்பிள் நிறுவனம் சம்சொங் நிறுவனத்தின் மீது காப்புரிமை விதிகளை மீறியமைக்காக அமெரிக்க நீதி மன்றத்தில் 2.5 பில்லியன் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்தது. இதற்கு பதிலடியாக சம்சொங் நிறுவனம் அப்பிள் நிறுவனத்திடம் நஷ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்தது.

அப்பிள் தனது IPone களில் பாவிக்கப்படும் காப்புரிமையுள்ள தொழில் நுட்பத்தையும், வடிவமைப்புக்களையும் சாம்சொங் திருடி தமது Smart Phone Galaxy இல் பாவித்துள்ளது என்பதே பிரதான குற்றச்சாட்டு. இந்த வழக்குகளை விசாரித்த அமெரிக்க நீதி மன்றம் அப்பிள் நிறுவனத்தின் நஷ்ட ஈட்டு கோரிகையின் நியாயத் தன்மையை ஏற்று 1 பில்லியன் டாலர் நஷ்ட ஈட்டை சாம்சொங் வழங்குமாறு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதேவேளை சாம்சொங்கின் வழக்கை நிராகரித்துள்ளது. இத்தீர்ப்புகளை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக சாம்சொங் அறிவித்துள்ளது.

முதலில் ஆசிய நாடுகளில் தனது அப்பிள் IPhone இன் வடிவமைப்பு, செயற்பாட்டை ஒத்த சாம்சொங்கின் Smart Phone Galaxy ஐ அறிமுகப்படுத்தி பெரிய விற்பனை இலாபத்தை ஈட்டியது சாம்சொங. சிறப்பாக இலங்கை, இந்தியா போன்ற தூரக்கிழக்கு நாடுகளில் சாம்சொங்கின் Smart Phone Galaxy தான் அதிஉயர் நிலை விலையுள்ள Smart Phone ஆக விற்பனையில் இருந்தது. அங்கு பெரும் பாலும் IPhone, Rim போன்றவற்றை காண முடியாது. ஆசிய சந்தையில் தனது வலுவான காலை பதிக்க முடியாமல் போனது அப்பிள் நிறுவனத்தால்.

சாம்சொங் அத்துடன் நிற்காமல் மெதுவாக ஐரோப்பிய சந்தையில் காலுன்றி வெற்றியும் கண்டது. இறுதியாக வட அமெரிக்காவின் சந்தையிலும் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அப்பிளைப் பொறுத்தவரையில் இது ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து, அமெரிக்காவை கடித்த போன்றதாகும். ஆப்பிள் பொறுக்குமா…? இதனை.

IPhone போன்ற Smart Phone களில் தனி இராச்சியம் அமைத்து கொள்ளை இலாபம் அடித்துக் கொண்டிருந்தது ஆப்பிள் நிறுவனம். வியாபாரத்தில் விலை நிர்ணயத்தை இல்லாமல் செய்து போட்டிகளை ஏற்படுத்தி விலைக் குறைப்பை செய்வதாக பெரும் முதலாளிகள் அறிவித்தாலும் இவர்கள் சாராம்சத்தில் ஒரு வகை ஏகபோகத்தை நிலை நிறுத்தி கொள்ளை இலாபம் அடிப்பதையே பெரிதும் விரும்புவர். இதனையே அப்பிள் நிறுவனமும் செய்ய முனைகின்றது. சாம்சொங்கும் கிடை த்த சைக்கிள் கப்பில் பாவனையாளருக்கு விருப்பமான வடிவமைப்பை, செயற்பாட்டை உடைய ஒரு Smart Phone ஐ Apple IPhone போல் வடிவமைத்து மாட்டிக் கொண்டு விட்டது.

சம்சுங்குக்கு எதிராக வழங்கப்பட்ட இத்தீர்ப்பானது மற்றைய நிறுவனங்கள் பலவற்றை குறிப்பாக அண்ட்ரோய்ட் இயங்குதளத்தினை தமது மொபைல் சாதனங்களில் உபயோகிக்கும் நிறுவனங்களிடையே அச்சத்தினைத் தோற்றுவித்துள்ளது. தாமும் இத்தகைய ஒரு பாரிய தொகையினை நட்ட ஈடாக செலுத்த வேண்டிவரலாம் என அவை அச்சங்கொண்டுள்ளன. இனாம்களை இல்லாமல் செய்து ஏகபோகங்கள் கொழுத்த லாபம் ஈட்டுவதின் இன்னொரு வடிவம் தான் எனக்கு மட்டும் உரியது இந்த காப்புரிமை. இது வியாபாரப் போரில் சர்வ சாதாரணம். சில நாடுகளில் விடுதலைப் போரிலும் இது பாவிக்கப்பட்டு தோற்றுப் போன வரலாறுகளும் உண்டு.
சம்சுங்கின் Smart Phone விற்பனையானது தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமை அப்பிளுக்கு மிகப் பெரும் தலையிடியாக மாறியிருந்தது. இந்நிலையில் இத்தீர்ப்பானது அப்பிளுக்கு சற்று உற்சாகமளித்துள்ளது என்பது மட்டும் நிச்சயம.

ஏதிர்காலத்தில் ஒரு குறிபிட்ட வகையில் தலை அலங்காரம் செய்தவரைப் போல் நீங்களும் அலங்காரம் செய்யாதீர்கள். ஏன் எனில் காப்புரிமை என்று சொல்லிக் கொண்டு நீங்கள் கலந்து கொள்ளும் இல்ல நிகழ்ச்சியில் தலையைப் பிடித்து சண்டைகள் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. காப்புரிமை அவ்வளவு முக்கியமானது ஏகபோகத்திற்கு?

(சிவா ஈஸ்வரமூர்த்தி)

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS