Socialize

ஆஸ்திரேலியாவை நோக்கிய மேலுமொரு அகதிகள் படகு விபத்தில்

இளவழகன்

ஆஸ்திரேலியாவை நோக்கி சென்ற அகதிகள் படகு புதன்கிழமை (2012:08:29) கவிழ்ந்தது. இந்தோனேசியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடைப்பட்ட கடலில் மூழ்கிய இக்கப்பலில் தப்பிய சுமார் 50 வரையான பயணிகளை APL Bahrain, HMAS Maitland மற்றும் சில வர்த்தக கப்பல்கள் வியாழன் காப்பாற்றியுள்ளன.

நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்னமும் கடலில் இருக்கலாம் என்ற காரணத்தால் தேடுதல் தொடர்கிறது. Australian Maritime Safety Authority (AMSA) இந்த தேடுதல் நடவடிக்கைகளை முன்னின்று செய்கிறது.

புதன் அதிகாலையே இரு தடவைகள் அபாய அறிவிப்பு (distress signal) இந்த வள்ளத்திலிருந்து கிடைத்திருந்தும் இந்தோனேசிய நடாத்திய உடனடி தேடுதல்கள் மூழ்கியோரை அடைந்திருக்க முடியவில்லை. பின்னர் ஆஸ்திரேலியாவும் தேடுதலில் இணைந்தது.

காப்பாற்றப்பட்டவர்கள் மேற்கு ஜாவாவில் உள்ள Merak எனும் இடத்திற்கு எடுத்து செல்லப்படவுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ வசதிகளும் வழக்கப்படும்.

வழமைபோல் இந்த படகிலும் சென்றவர்கள் ஈரான், ஸ்ரீ லங்கா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவை நோக்கி செல்லும் அகதிகளாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. காப்பாற்றப்பட்டவர்கள் சிலரின் கருந்துப்படி அந்த படகில் சிறுவர் பெண்கள் உட்பட சுமார் 150 வரையான அகதிகள் இருந்துள்ளனர்.

சென்ற புரட்டாதி மாதத்தில் சுமார் 60 பயணிகளை கொண்ட அகதிகள் கப்பலும் அதற்கு முன் ஆடி மாதத்தில் 200 பயணிகளை கொண்ட அகதிகள் கப்பலும் இந்த கடல் பரப்பில் கவிழ்ந்து இருந்தன. அப்போதும் கணிசமானோர் காணாமல் போயிருந்தனர்.

இவ்வாறு அகதிகள் ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதை தடுக்கும் நோக்கில் ஆஸ்திரேலியா புதிய சட்டங்களை அமைத்தாலும் அகதிகளின் ஆபத்தான பயணங்கள் தொடர்கின்றன.

இந்த புரட்டாதி மாதத்தில் இருந்து இவ்வாறான வள்ள அகதிகள் Narun என்ற தீவிற்கு எடுத்து செல்லப்படுவர். அங்கேயே அந்த அகதிகளை விசாரணைகள் நடைபெறும். ஆஸ்திரேலியாவின் வடகிழக்கே அமைந்துள்ள Nauru உலகத்தில் மிக சிறிய தீவு நாடாகும். இந்த நாட்டின் மக்கள் தொகை சுமார் 10,000 மட்டுமே.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS