Socialize

இந்தியாவின் 100 வது வெற்றிகர satellite ஏவல்

இளவழகன்

இந்தியாவின் வான்வெளி ஆராய்ச்சி நிலையமான ISRO (Indian Space Research Organization) நேற்று (2012:09:09) தனது 100 வது satellite ஏவுதலை வெற்றிகரமாக செய்துள்ளது. தென் இந்தியாவில் உள்ள ஸ்ரீ ஹரிகோட்ட (Sriharikota) ஏவுதளத்தில் இடம்பெற்ற இந்த எவுதலின்போது ஒரு பிரெஞ்சு நாட்டில் தயாரிக்கப்பட்ட satellite உம் ஒரு ஜப்பான் நாட்டில் தயாரிக்கப்பட்ட satellite உம் ஏவப்பட்டது.

ஞாயிறு காலை 9:43 இக்கு ஏவப்பட்ட இந்த 44 மீட்டர் உயரமானதும் 230 தொன் எடையும் கொண்டதுமான PSLV-C21 (Polar Satellite Launch Vehicle – C21) பிரெஞ்சு நாட்டில் தயாரிக்கப்பட்ட SPOT 6 (System Pour l’Observation de la Terre) என்ற satellite ஐயும் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட Proiteres என்ற சிறியதோர் satellite ஐயும் வான்வெளிக்கு அனுப்பியது. ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான Astrium SAS இற்கு சொந்தமான SPOT 6 என்ற satellite உலகை 1.5 மீட்டர் அளவில் துல்லியமாக படம் பிடிக்கக்குடியது.

ஏவப்பட்டு சுமார் 18 நிமிட நேரத்தில் சுமார் 635 km உயரத்தில் ஐந்தே இரண்டு satellite களும் செயல்பட வைக்கப்பட்டன. இந்த இரண்டு satellite களின் மொத்த எடை 712 Kg ஆகும். இந்த ஏவுதலுக்கு 90 கோடி இந்திய ரூபாய்கள் செலவாகி இருந்தது.

ISRO இனால் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது satellite Aryabhatta 1975 இல் ரஷ்யாவினால் ஏவப்பட்டிருந்தது.

இந்த இரண்டு satellite களையும் சேர்த்து இதுவரை இந்தியா மொத்தம் 29 வெளிநாட்டு satellite களை வான்வெளிக்கு அனுப்பியுள்ளது. SPOT 6 வெற்றிகர ஏவுதல் SOPT 7 ஐயும் இந்தியா ஏவுவதற்கு வழி அமைத்துள்ளது. SPOT 7 அடுத்த வருடம் ஏவப்படும்.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS