Socialize

இந்தியா வரும் Walmart

(இளவழகன்)

அமெரிக்க விற்பனை நிறுவனமான Walmart இந்தியாவில் தனது கிளைகளை அடுத்த 18 மாதங்களுள் திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மாதம் 14 ஆம் இந்திய மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கிய சட்டப்படி மாநில அரசுகள் விரும்பினால் அவை தமது மாநிலங்களுள் வெளிநாட்டு விற்பனை நிலையங்களை ஆரம்பிக்க உரிமைகள் வழங்கலாம். அதன்படி இதுவரை 16 மாநிலங்கள் அவ்வாறு வெளிநாட்டு விற்பனை நிலையங்களை அனுமதிக்க முன்வந்துள்ளன.

இந்த சட்டப்படி ஒரு மில்லியன்னுக்கும் அதிகமான மக்கள் உள்ள நரங்களில் மட்டுமே வெளிநாட்டு விற்பனை நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கப்படும்.

Walmart தற்போது இந்தியாவில் இணைந்து செயல்படும் Bharti Enterprises போன்ற சில்லறை நிறுவங்களுடன் இணைந்து அல்லது அவற்றை முழுமையாக கொள்வனவு செய்து கிளைகளை திறக்கலாம். அல்லது அவர்கள் சொந்தமாகவே புதிய கிளைகளை திறக்கலாம். இதுபற்றி அவர்கள் முடிவுகள் எதையும் எடுக்கவில்லை என்கிறார்கள்.

இந்தியாவின் சில்லறை விற்பனை அடுத்த ஐந்து வருடத்துள் US$ 725 பில்லியன் ஆக உயரலாம் எனவும் இந்த வர்த்தக வருட வளர்ச்சி 7.5% ஆக இருக்கும் எனவும் கணிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை பல இந்திய மத்திய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் இவ்வகையில் வெளிநாட்டு நிறுவனக்கள் நுழைவதை எதிர்க்கின்றன. BJPயின் L.K. அத்வானி பகிரங்கமாக தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்த சட்டத்துக்கு எதிராக ஊர்வலம் நடத்தியுள்ளனர்.

சீனாவில் தனது கிளைகளை Walmart பல வருடங்களின் முன் ஆரம்பித்திருந்தாலும் அங்குகூட இலாபம்பெற பல வருடங்கள் எடுத்தன. தற்போது இங்கு Walmart சுமார் 380 கிளைகளை கொண்டுள்ள அதேவேளை வருடாவருடம் 50 முதல் 60 வரையான புதிய கிளைகளையும் இங்கு திறந்து வருகிறது.

ஜப்பானுள் தனது கிளைகளை 2002 முதல் ஆரம்பித்த Walmart இன்று அங்கு சுமார் 430 இலாபகரமான கிளைகளை கொண்டுள்ளது.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS