Socialize

இரு தமிழர் கடனட்டை விவகாரத்தில் கைது

 

இரண்டு கனேடிய தமிழர்கள் கள்ள கடனட்டை பாவனை காரணமாக நியூ யோர்க் பொலிசாரால் கைது செய்யப்படுள்ளனர். இந்த இருவரும் 28 வயதுடைய ஞானபண்டிதன் சிவரூபன், 24 வயதுடைய பத்மசேனன் ராகவன் என பொலிசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மீது சடவிரோத உபகரணங்களை வைத்திருந்தது, களவாடப்பட்ட கடன் அட்டைகளை வைத்திருந்தது போன்ற குற்றம்கள் சுமத்தப்படுள்ளன.

பொலிசாரின் கூற்றுப்படி இவர்களிடம் 257 VISA மற்றும் Mastercard போன்ற வடிவங்களுடனான கடன் அட்டைகளும் $56,000.00 வரையான பணமும் இருந்துள்ளன.

Juan Rodriguez என்ற நியூ யோர்க் போலீஸ் அதிகாரி இவர்களின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை வெள்ளிக்கிழமை இரவு 9:45 அளவில் Boardway வீதி – West 90th வீதி சந்திப்பில் உள்ள Chase Manhattan கிளையில் அவதானித்ததை தொடர்ந்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இந்த போலீஸ் அதிகாரி முதலில் இந்த இருவர் மீது சந்தேகம் கொண்டிருந்தாலும் உடனடியாக இவர்களுடன் எதுவும் கதைக்காது தனது காரை செலுத்தி, மீண்டும் ஓரிரு நிமிடம்களில் அங்கு வந்து இவர்களை அவதானிக்க வசதியான இடத்தில் இருந்து நோட்டம் விட்டுள்ளார். விடயம் விளங்கியபோது மேலும் இரு பொலிசாரை உதவிக்கு அழைத்து இந்த இருவரையும் கைது செய்துள்ளார்.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS