Socialize

இளையராஜா, வைரமுத்துவின் மகன்கள் கூட்டுச் சேர்கிறார்கள்

ஜோர்ஜ்

இளையராஜாவின் இசையும் வைரமுத்துவின் பாடல் வரிகளும் தமிழ்ச் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டிருந்தன. தற்போது இவர்களின் பிள்ளைகளும் இதே வெற்றியை மீண்டும் சாதிக்கப் புறப்பட்டிருக்கிறார்கள்.

வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி தற்போது தமிழ்த் திரையுலகில் பாடலாசிரியராக புகழ் பெற்று வருகிறார். தற்போது வைரமுத்துவின் மூத்த மகன் கபிலன் வைரமுத்துவும் பாடலாசிரியராகப் போகிறார்.

இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா தன்னுடைய படம் ஒன்றில் கபிலனை பாட்டெழுத வைக்கிறார். அஜித், நயன்தாரா நடித்து விஷ்ணுவர்த்தன் இயக்கும் படம் ஒன்றிலேயே இந்தக் கூட்டணி கூட்டுச் சேர்கிறது.

தந்தையர்கள் எண்பது, தொண்ணூறுகளில் வரலாறு படைக்கும் போது, ஒலிப்பதிவுக் கூடங்களில் ஒன்றாக விளையாடித் திரிந்தவர்கள் இவர்கள். அப்போது ஏற்பட்ட நட்பே இப்போதும் தொடர்கிறது. அந்த நட்பின் கனியாகவே இந்த கன்னி முயற்சி இடம் பெறுகிறது.

இசை மழை பொழியட்டும், ஒவ்வொரு துளியிலும் இவர்களின் புலமை தெரியட்டும்! இசைஞனின் தோட்டத்து முந்திரியும், கவிஞனின் தோட்டத்து மாங்கனியும் சேர்ந்தால் சுவைக்கு ஏது குறைச்சல்?

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS