Socialize

இஸ்லாத்தின் திருமறை நூலாகிய குரான் ‘எரிக்கப்பட்டதின்’ சூத்திரதாரி யார்?

மித்திரன்

பாகிஸ்தானில் கிறீஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்களினால் பலவிதமான பாதிப்புகளி ற்கு உள்ளாக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.

கடந்த ஜூலை மாதம் தெய்வ நிந்தனை குற்றம் சாட்டப்பட்டு போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிறீஸ்தவ மதத்தை சேர்ந்த பாகிஸ்தானியர் ஒருவர் அப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்களினால் போலீஸ் நிலையத்திலிருந்து வெளியே இழுத்து வரப்பட்டு அடித்து கொல்லப்பட்டு பின்னர் எரிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் கிறீஸ்தவ சிறுமி ஒருவரின் பையிற்குள் எரிக்கப்பட்ட குரானின் சில பக்கங்கள் காணப்பட்டதாக தெய்வ நிந்தனை குற்றம் சாட்டப்பட்டிருந்தார். அச்சிறுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் அப்பகுதி போலீஸ் நிலையத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினர் .இதனைத்தொடர்ந்து, சிறுமியின் பாதுகாப்பையும் கவனத்திற் கொண்ட பொலிசார் இஸ்லாமாபாத்தை அண்டிய பகுதியிலிருந்து அச்சிறுமியை கைது செய்தனர். முஸ்லிம் அயலவர்களினால் தாம்
தாக்கப்படுவோம் என்ற பீதியின் காரணமாக கிறீஸ்தவர்கள் பலர் சிறுமியின் கிராமத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

அதே நேரத்தில் காலித் சிஷ்டி எனும் முஸ்லிம் தீவிரவாத மதத்தலைவர் குரானின் சில பக்கங்களை மேற்குறிப்பிட்ட கிறீஸ்தவ சிறுமி எடுத்து சென்ற எரிந்த பத்திரிகைகளும் சாம்பலும் அடங்கிய பையிற்குள் களவாக வைத்தாக அதே பள்ளிவாசலை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் கொடுத்த தகவலை அடுத்து காலித் சிஷ்டி பாகிஸ்தானிய பொலிசாரினால் கடந்த சனிக்கிழமை (1-9-2012) கைது செய்யப்பட்டிருக்கிறார்.

குரானின் சில பக்கங்களை சிறுமி எடுத்து சென்ற எரிந்த பத்திரிகைகளும் சாம்பலும் அடங்கிய பையிற்குள் வைத்ததன் மூலம் கிறீஸ்தவ சிறுமியே குரானை எரித்தார் என்று சோடனை செய்து அப்பகுதி கிறிஸ்தவர்களை அங்கிருந்து விரட்டுவதே சம்பந்தப்பட்ட மதகுருவின் உள்நோக்கமாகும்.

இருபது லட்சம் கிறிஸ்தவர்களின் பதுகாப்பின்மையை கருத்திற்கொண்டுää பாகிஸ்தான் ஐக்கிய கிறிஸ்தவர்கள் நலன்புரி சங்கத்தின் தலைவர் யூனுஸ் மஸிஹ் பாட்டி கிறிஸ்தவர்களுக்கென தனி மாநில கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

பெரும்பான்மையினர் சிறுபான்மையினரை அடக்க முற்படும்போது இரு சமூகத்தினரும் மட்டுமல்ல, முழு நாடுமே சீரழிந்து போனதே வரலாறு கற்றுத் தந்த பாடமாகும்.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS