Socialize

உங்கள் வீடுகளை விற்கும்போது வருமான வரி கட்ட வேண்டுமா?

ஜோர்ஜ்


உதாரணத்திற்கு வீட்டை விற்பதில் ஒரு லட்சம் டொலர்கள் லாபம் வந்தால், அதில் ஐம்பதாயிரத்திற்கு வரி செலுத்த வேண்டும்.
ஆனால் இன்னொரு வீட்டை வாங்கி லாபம் பெறும் பலரும் அதை சொந்த வீடு என்று கூறி வருமான வரி செலுத்தாமல் தப்பிக்க முயற்சிக்கிறார்கள். சொந்தமாக வசிக்கும் வீட்டைக் கூட இப்படி அடிக்கடி வாங்கி விற்றால் கனடிய வரி அதிகாரிகளின் கண்காணிப்புக்கு ஆளாக வேண்டி வரலாம்.

இப்படியாக வான்கூவரில் ஒரு வீடு விற்பனை முகவர் ஒருவர் வீடு ஒன்றை வாங்கி விற்ற போது, அது தன் இருப்பிடம் என்று கூறி, அதன் லாபத்திற்கு வரி செலுத்தவில்லை. ஆனால் கனடிய வரி அதிகாரிகளோ இவர் இப்படியாக பல வீடுகளை வாங்கி விற்று வந்ததால், இதை அவர் ஒரு முதலீடாகவே செய்திருக்கிறார் என்று கூறிய போது, அவர் நீதிமன்றம் வரை சென்றார். அவர் ஏழு வருடங்களுக்குள் 7 வீடுகளை வாங்கி விற்றதால், நீதிபதி கனடிய வரி அதிகாரிகளுக்கு சாதகமாகவே தீர்ப்பளித்திருக்கிறார்.

நீதிமன்றமும் கனடிய அதிகாரிகளும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் எவ்வகையான வீடு, எவ்வளவு காலமும் உரிமையாளரின் கையில் இருந்தது, என்ன திருத்த வேலைகள் செய்ய்பட்டன, என்ன நோக்கத்தில் அந்த வீடு வாங்கப்பட்டது என்பதை எல்லாம் கருத்தில் கொண்டே இந்த வரி பற்றிய முடிவுகளை எடுக்கிறார்கள்.
இது சட்ட ரீதியான வழி.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS