Socialize

உளநலம்: சூதாட்டம்

உங்களுக்குத் தெரியுமா?

சுல்பிகா

சூதாட்டம் என்பது
வெற்றியும் தோல்வியும் நிகழ்தகவினால் தீர்மானிக்கப்படும் போது, பணத்தை அல்லது உடமைகளை இழப்பதற்கான சந்தர்ப்பம் இருக்கையில், பந்தயம் வைத்து விளையாடுதலாகும்.
பின்வருவன போன்ற விளையாட்டுக்கள் சூதாட்டத்திற்குரிய விளையாட்டுக்களாகும்.
கசினோ விளையாட்டுக்கள், போக்கர், ஸ்லொட் இயந்திரம் உட்பட
எல்லா வகையான லொட்டறிகள், ரிக்கற்றுக்ள்
இன்ரநெற்,டம்போளா விளையாட்டுக்கள்
டோமினோ, பிங்கோ
குதிரைப்பந்தயம்
காட், கீனோ விளையாட்டு
விளையாட்டுப் பந்தயங்கள்

கனேடிய போதை, உளநல நிலையத்தின் (CAMH) தகவலின் படி, பிரச்சினைக்குரிய சூதாட்டப் போதையிலுள்ளோர் ஏனையவர்களை விட 18 மடங்கு தற்கொலை செய்யக்கூடிய வாய்ப்புக்களையும் 11 மடங்கு வன்முறையில் ஈடுபடக்கூடிய வாய்ப்புக்களையும், 20 மடங்கு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடக்கூடிய வாய்ப்புக்களையும் கொண்டுள்ளனர். எல்லா வயதினரும் எல்லாக் கலாசாரத்தைச் சேர்ந்தவர்களும் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். 2010 இல் செய்யப்பட்ட ஆய்வின்படி, 17-24 இற்கும் இடைப்பட்ட வயதினரும் முதியோர்களுமே பெருமளவில் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஒன்ராறியோவில் 29,000 இற்கும் மேற்பட்ட 7-12 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் நோய்க்குரிய சூதாட்டப் போதை நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நோய்க்குரிய சூதாட்டப் போதைநிலையடைவோர் ஓன்ராறியோவின் மொத்த சூதாட்ட சனத் தொகையில் 3-4 வீதத்தினரேயாகும். எனினும் ஓன்ராறியோ அரசின் 3.8 பில்லியன் சூதாட்ட வருமானத்தில் 38-40 வீதம் இவர்களது இழப்பினாலேயே கிடைக்கின்றது. ஸ்லொட் மெசின் விளையாட்டுக்களிலேயே பொருமளவானோர் பணத்தை இழக்கின்றனர். பெண்களை விட ஆண்கள் முன்று மடங்கு அதிகமாக விளையாடுகின்றனர்.

சூதாட்டப் போதையானது…

உள-உடல் நலத்தைப் பாதிக்கின்ற நோய் நிலைமைகளை உருவாக்கக்கூடியது.
இது பாரம்பரியமாகக் கடத்தப்படக்கூடியது.
இதற்குப் பொறுப்பான பரம்பரை அலகுகள் இது தொடர்பான தொடர்ச்சியான அவாää மனவெழுச்சிää திருப்தி போன்றவற்றை ஏற்படுத்துகின்றன.
இதற்குரிய பரம்பரை அலகுகளைக் கொண்டிருப்போரில், சூதாட்டத்தைப் பரீட்சித்தலே அவர்களை அதனுள் விழக்கூடிய ஆபத்தினை உருவாக்கக்கூடியது.
சமூகச் சூழல் இதன் தொற்றுதலுக்கும் உக்கிரத்திற்கும் பங்களிக்கின்றது.
சூதாட்டப் போதைக்கான அறிகுறிகள்
சூதாட்ட விடயத்தை இரகசியமான வைத்திருந்தல் அல்லது பொய் கூறுதல்
சூதாட்டம் காரணமாக வேலையை அல்லது வீட்டுப்பொறுப்புக்களை புறக்கணித்தல்
மனஉழைச்சல் அல்லது கோபத்திற்கு உள்ளாதல்
தோல்வியைத் துரத்திப் பிடிக்க எத்தனித்தல்
கடைசியில் பெரும் வெற்றியை சூதாட்டம் கொண்டு வரும் என நம்புதல்
சூதாட்டத்தை வாழ்வில் மிக முக்கிய விடயமாக நோக்குதல்
சூதாட்டம் காரணமாக குடும்ப சமூகப்பிரச்சினைகள் உருவாதல்
உடல் உள ஆரோக்கியம் தொடர்பான அக்கறை அற்றுப்போதல், ஆரோக்கியம் கொடுதல்
நினைத்ததை விட நீண்ட நேரம் விளையாடுதலும் கூடுதலாகச் செலவிடுதலும்
பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக அல்லது சமாளிப்பதற்காக சூதாடச்செல்லுதல்

சூதாட்டம் போதை நிலையை அடைவதற்குள்ள ஆபத்தான காரணிகள்
பராம்பரிய நிலை, சூழல் வாய்ப்புக்கள் இருத்தல்
ஆரம்ப காலத்தில் வெற்றி கிடைத்திருத்தல்
பணப்பிரச்சினை இருத்தல்
அண்மைக்காலத்தில் இழப்பு அல்லது வாழ்க்கை மாற்றம் ஏற்பட்டிருத்தல்
தனிமை உணர்வும் வேறு பொழுதுபோக்கு இல்லாமையும்
வாழ்க்கையில் வெறுப்பு
வெற்றி வாய்ப்புப் பற்றிய மூடநம்பிக்கைகள்
துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டிருத்தல்
வேறு போதை விடயங்கள் உள்ளவராக இருத்தல்

ஓன்ராறியோவில் சூதாட்டப் போதைக்கான உளவள சேவை, பெருமளவு பாதிக்கப்படுகின்ற சமூகங்களுக்கு வழங்கப்படல் வேண்டும் என்ற CAMH இன் பரிந்துரைக்கிணங்க தெரிவு செய்யப்பட்டுள்ள நான்கு தெற்காசிய சமூகங்களில் தமிழ்ச் சமூகமும் ஒன்றாகும். தெற்காசிய சமூகத்திலுள்ள கலாசார நடைமுறைகள் இதனை வெளிப்படுத்துவதற்கு தடையாக இருந்த போதிலும் Bankruptcy பணம் கோருவதற்குரிய முக்கிய காரணமாக இது முன்வைக்கப்படுவது இதனை அறிவதற்குக் கிடைக்கின்ற தகவல் மூலமாகவுள்ளது. உண்மை எதுவாக இருந்த போதும் முதியோர்களிடையேயும் குடும்பஸ்தர்களிடையேயும் இது ஒரு வருமானம் தருகின்ற தொழிலாக நோக்கப்படுவது ஆபத்தான விடயமாகவே உள்ளது.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS