Socialize

எகிப்து குற்றசாட்டு, சிரியா வெளிநடப்பு

இளவழகன்

தற்போது ஈரானில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் அணிசாரா மாநாட்டில் உரையாற்றிய எகிப்தின் அதிபர் மோர்சி (Morsi) சிரியாவின் ஆட்சியாளர் மீது கடுமையான கண்டனங்களை வீசியதை தொடர்ந்து சிரிய அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர்.

மோர்சி உரையாற்றுகையில் சிரிய அரசு ஒரு ‘oppressive regime’ என்றும் தாம் சிரிய மக்களை ஆதரிக்க வேண்டியது தமது கடமை என்றும் கூறியுள்ளார். அது மட்டுமன்றி எல்லோரும் அமைதியான முறையில் சிரிய மக்கள் நீதியையும் சுதந்திரத்தையும் அடைய ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மோர்சியின் உரையால் ஆத்திரம் கொண்ட சிரிய பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர். சிரியாவின் வெளிவிவகார அமைச்சர் Walid Muallem மோர்சியின் உரை சிரியாவில் நடக்கும் இரத்த களரியை ஆதரிப்பதாக குற்றம் சாட்டினார்.

மோர்சியின் சிரியா மீதான இந்த குற்றசாட்டு சிரியாவின் நட்பு நாடானதும் அணிசார மாநாட்டை நடாத்தும் நாடுமான ஈரானுக்கு இக்கட்டை ஏற்படுத்தியுள்ளது.

இதற்குமுன் பேசிய ஈரானிய தலைவர் Ayatollah Ali Khamenei UN ஒரு நீதியற்ற, ஜனநாயகம் இல்லாத, நன்கறிந்த சர்வாதிகார அமைப்பு என கூறியிருந்தார். இந்த கூட்டத்தில் UN செயலாளர் நாயகம் பன் கி மூன் (Ban Ki Moon) உம் பங்குபற்றி இருந்தார்.

மோர்சி ஈரான்-சவுதி-துர்க்கி-எகிப்த கொண்ட குழு ஒன்று சிரியாவில் சமாதானம் ஏற்பட செயல்படலாம் என்ற ஒரு யோசனையையும் முன்வைத்திருந்தார். பன் கி மூனும் ஈரானின் பங்குபற்றலை வலியுறுத்தி இருந்தார். அனால் ஈரான் Assad ஐ கைவிடுவதாய் இல்லை. அத்தோடு Assad இன் எதிரிகள் ஈரானின் பங்களிப்பை ஏற்பதாயும் இல்லை.

அணிசார மாநாட்டில் என்னதான் சொல்லப்படாலும், என்ன முடிவுகள்தான் எடுக்கப்பட்டாலும் ரஷ்யாவினதும் சீனாவினதும் ஆதரவு இல்லாமல் சிரியாவில் எதுவும் நடக்கப்போவது இல்லை. Assad இன் மிக நெருங்கிய நண்பனாக ரஷ்யா உள்ளது. Assad இன் எதிரிகளான அமெரிக்கா இஸ்ரேல் போன்ற நாடுகளின் உள் நோக்கங்களையும் ரஷ்யா நன்கறியும்.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS