Socialize

எரிபொருட்களுக்கு U$ 1.2 பில்லியன் மேலதிகம்?

 

இளவழகன்

ஈரான் மீது அமெரிக்கா நடைமுறைப்படுத்திய பொருளாதார தடை காரணமாக இலங்கை ஈரான்லில் இருந்து பெறும் எரிபொருளை 20% ஆல் குறைக்க அமெரிக்காவினால் பணிக்கப்பட்டது. இதற்கு பிரதியுபகாரமாக வேறு பொருளாதார மற்றும் அரசியல் உதவிகள் இலங்கைக்கு ஹில்லரி கிளிண்டன் ஆல் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் இப்போது, Tehran Times  கருத்துப்படி, இலங்கை U$ 1.2 பில்லியன் அதிகமாக எரிபொருளுக்கு செலவு செய்யவேண்டியுள்ளது.

Tehran Times கருத்துப்படி இலங்கை எரிபொருள் கொள்வனவுக்கு கடந்த வருடம் ஐப்பசி வரை U$ 3.8 பில்லியன் மட்டுமே செலவிட்டிருந்தது. ஆனால் இவ்வருடம் ஐப்பசி வரை U$ 5 பில்லியன் செலவிட்டுள்ளது. ஈரானில்  இருந்து எரிபொருள்களை கொள்வனவு செய்வது மட்டுமல்ல, கொள்வனவு செய்தவற்றை எடுத்துவர கொள்கலன் கப்பல்களை பெறுவதும் மிக கடினமாகவும் செலவு அதிகமானதாகவும் உள்ளது. பல மேற்கு நாட்டு வங்கிகள் ஈரான் சம்பந்தப்பட்ட கொள்கலன் கப்பல்களை காப்புறுதி செய்வதை நிறுத்தியதால் பல கொள்கலன் கப்பல் நிறுவங்களும் ஈரான் துறைமுகங்களை தவிர்க்கின்றன.

அது மட்டுமன்றி இலங்கை சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஈரான் மசகு எண்ணையை மட்டுமே தரமாக சுத்திகரிக்கும் என்றபடியால் ஏனைய நாட்டு எரிபொருளை சுத்திகரித்த நிலையிலேயே இறக்குமதி செய்வது அவசியமாகிறது. ஈரானிய எரிபொருள் குறைப்பு காரணமாக இலங்கை சுத்திகரிப்பு வேலைகள் சிலகாலம் நிறுத்தப்படவும் கூடும். சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் நாளொன்றுக்கு சுமார் 50,000 பரல் ஈரானிய  எண்ணையை சுத்திகரிக்கும் வசதி கொண்டது.

அடுத்த எரிபொருள் விநியோகம் கார்த்திகை 8ஆம் அல்லது 9ஆம் திகதிகளில் Dubai இல் இருந்து கிடைக்கும்.

கடந்த ஆணி மாதத்தில் ஹில்லரி கிளிண்டன் இலங்கை தனது ஈரானிய எரிபொருள் கொள்வனவை தமது விருப்பப்படி குறித்தமையால் இலங்கை மீது தண்டனைகள் விதிக்கப்படமாட்டாது என கூரியிருத்தார்.

தரவுகள்: Tehran Times, Reuters

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS