Socialize

ஐப்பசியில் விண்டோஸ் 8 மகத்தான வெளியீடு

ஜோர்ஜ்
கணனிகளின் இதயமான விண்டோஸ் மென்பொருளின் எட்டாவது வடிவத்தை மைக்ரோசொப்ட் நிறுவனம் ஐப்பசி மாதம் 26ம் திகதி வெளியிட உள்ளது. இதுவரை காலமும் மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்ட விண்டோஸ் வடிவங்களில் எட்டாவது வடிவம் தான் இதுவரையும் கடுமையான பரீட்சார்த்தங்களுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.
இதுவரையும் 16 மில்லியன் கணனிகளில் விண்டோஸ் 8 பரீட்சித்துப் பார்க்கப்பட்டு, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஏற்கனவே விண்டோஸ், விஸ்ரா, 7 பதிப்புகளை பயன்படுத்துவோர் விண்டோஸ் 8 ஐ 40 அமெரிக்க டொலர்களுக்கு தரவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம். இந்த இணைப்பில் எவ்வாறு தரவிறக்கம் செய்வது என்பது குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. தரவிறக்கம் செய்ய விரும்பாதவர்கள் 70 டொலர்களுக்கு டிவிடி தட்டில் தபால் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

விண்டோஸ் 8 ஐ வெளிவருவதற்கு முன்பாகவே பரீட்சித்துப் பார்க்க விரும்பும் முன்னோடிகள் பரீட்சார்த்தப் பதிப்பை இந்த இணைப்பில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS