Socialize

ஒபாமா மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு

 

தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி இன்றைய தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுகிறார். வாக்கு கணக்கெடுப்பு தொடர்ந்து நடைபெற்றாலும், ஒபாமா மீண்டும் ஜனாதிபதியாவது தெளிவாகியுள்ளது. இதன்படி ஒபாமா 2016 ஆம் ஆண்டின் இறுதிவரை அமெரிக்க ஜனாதிபதியாக பதவிவகிப்பார்.

அமெரிக்க தேர்தல் முறைப்படி ஒபாமா அதிக Electoral Votes களை பெற்று வெற்றி பெற்றாலும் ராம்னியைவிட மிக அதிக வாக்குகளை கொண்டிருக்க போவதில்லை. இரவு 2:00 மணியளவில் ஒபாமாவுக்கு 303 Electoral வாக்குகளும் ராம்னிக்கு 203 Electoral வாக்குகளும் கிடைத்துள்ளன. அதேவேளை அவர்களுக்கு கிடைத்த வாக்குகள் முறையே 53,599,676 உம் 52,880,743 உம் ஆகும். அதாவது ஒபாமா 50% வாக்குகளையும் ராம்னி 49% வாக்குகளையும் இதுவரை பெற்றுள்ளனர். வாக்கு கணிப்பீடு தொடர்ந்தும் நடைபெறுகிறது. ஆனால் ஒபாமா தனக்கு வேண்டிய Electoral வாக்குகளை பெற்றுள்ளார்.

2008 ஆம் ஆண்டில் ஒபாமா 365 electoral வாக்குகளை பெற்றிருந்தார். அப்போது அவருக்கு 52.9% வாக்குகள் கிடைத்திருந்தன.

ராம்னி தனது தோல்வியை ஏற்கும் பேச்சில் தான் ஒபாமாவை தொலைபேசி மூலம் வாழ்த்தியதாகவும் கூறியிருந்தார். ஒபாமாவும் தனது வெற்றியை ஏற்கும் பேச்சில் ராம்னியை வாழ்த்தினர்.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS