Socialize

கடலின் அக்கரைப் போக முனையும் அகதித் தமிழர்கள்

ஜோர்ஜ்

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னாலும் வெளிநாடுகளுக்கு தஞ்சம் கோரிச் செல்லும் அகதிகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அவுஸ்திரேலியா, ஐரோப்பா, கனடா என்று உயிரிழப்புப் பயங்களுக்கும் மத்தியில் மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த அகதிகள் இந்தியாவில் கைது, படகு கவிழ்ந்து அகதிகள் பலி, அவுஸ்திரேலிய அகதி முகாம்களில் அகதிகள் துன்புறுத்தல் என்று அடிக்கடி செய்திகள் வந்து கொண்டிருந்தாலும் உயிரைப் பணயம் வைத்துச் செல்பவர்களின் தொகை குறைந்தபாடில்லை. வெளிநாடுகளில் உள்ள உறவினர்கள் அனுப்பும் பணத்தைச் செலவிட்டு எப்படியாவது வெளிநாடு சென்றே ஆக வேண்டும் என்று தமிழர்கள் உள்ளனர். இவர்களில் சிலரை நீர்கொழும்பில் பேட்டி கண்டு தயாரிக்கப்பட்டிருந்த ஒரு தொலைக்காட்சிச் சித்திரம் இது.

Connections | July 23, 2012 from Young Asia Television on Vimeo.


அல் ஜசீரா தொலைக்காட்சியும் இந்தப் பயணங்கள் குறித்து செய்தி விவரணம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS