Socialize

கண்ணாளனை கண்டு பிடி!

பரதன்

போன வார இறுதியில் எடுத்த எடுப்பிலேயே hat trick அடித்து ஆங்கில உதைபந்தாட்ட வீரர்களை துள்ளி குதிக்க வைத்துவிட்டார் இந்த வீரர்.அதுவும் பணத்தில் குளிக்கும் இங்கிலாந்து உதைப்பந்து விளையாட்டுக் கழகம் மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கு சார்பாக.

ஒல்லாந்து இந்த முறை யுரோ கப்பில் முதலாவது சுற்றுலேயே வெளியேறிய நிலையில் உலகே வெறுத்து போயிருந்த இந்த ஒல்லாந்து வீரர் தனது இங்கிலாந்து விளையாட்டு கழகமான ARSENEL இல் இருந்து விலகி மன்செஸ்டருக்காக 24 மில்லியன் பவுன்ஸ் இற்கு மாற்றலாகினார்.முதல் ஆட்டம் ஒரு கோல்,இரண்டாம் ஆட்டம் 2-1 என்ற நிலையில் தோற்றுக்கொண்டிருந்த தனது கழகத்தை தான் மூன்று கோல்கள் அடித்து வெற்றிக்கு இட்டு சென்றார் .

நாளைய உதைபந்து சுப்பர் ஸ்ரார் இவரோ யாருக்கு தெரியும் .
இவர்தான் ராபின் வன் பேர்சி.
வாழ்த்துக்கள்.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS