Socialize

கனடாவில் சுனாமி எச்சரிக்கை

 

இளவழகன்

கனடாவின் British Columbia (B.C.) வின் கரையோரத்தில் சனிக்கிழமை இரவு 8:04 மணிக்கு (PST) ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடப்படுள்ளது. Magnitude 7.7 இலான இந்த நிலநடுக்கம் Haida Gwaii என்ற இடத்துக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது. அதன் பின்னர் magnitude 5.8 வரையிலான Aftershock களும் ஏற்பட்டுள்ளன. இந்த நடுக்கம் நிலத்துக்குகீழ் 10 km ஆழத்தில் இடம்பெற்றதாக அமெரிக்க USGS தெரிவித்துள்ளது.

இந்த சுனாமி எச்சரிக்கை கனடிய BC/Vancouver கரையோரங்களுக்கும் Alaska, Washington, Oregon, வட கலிபோர்னிய  கரையோரங்களுக்கும் விடப்பட்டுள்ளது. கரையோரப்பகுதிகளில் குடியிருப்போரை உயர்வான இடங்களுக்கு செல்லுமாறும் கேட்கப்பட்டுள்ளது. அலைகள் இரவு 09:17 (PST) மணியளவில் Vancouver தீவின் வடபகுதியை அடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஆரம்ப அலைகளைவிட பின்னர் வரும் அலைகளே அதிக ஆபத்தானதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலதிக அவசரகால விபரங்களை பின்வரும் இணையத்திலும் பெறலாம்:
http://www.emergencyinfobc.gov.bc.ca/

 

பிந்திய செய்திகள்:
இந்த சுனாமி எச்சரிக்கை ததற்போது Hawaii தீவுகளுக்கும் விடப்படுள்ளது. Gerard Fryer என்ற Pacific Tsunami Warning Center அதிகாரியின் கருத்துப்படி Hawaiiயில் அலைகளின் உயரம் 3 அடி முதல் 7 அடி வரை இருக்கலாம்.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS