Socialize

காணாமல் போன மைக்கேல் ஜாக்சனின் தாயார் மீண்டும் மைக்கேலின் குழந்தைகளின் பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜோர்ஜ்


சமீபத்தில் மைக்கேலின் தாயார் கத்தரின் பத்து நாட்களாக குழந்தைகளுடனான தொடர்பின்றி இருந்ததை அடுத்து, கலிபோர்ணிய நீதிபதி ஒருவர் கத்தரின் ஜாக்சனை பாதுகாவலர் பொறுப்பிலிருந்து நீக்கி விட்டு, கத்தரினின் பேரனான ரிஜே ஜாக்சனை நியமித்திருந்தார்.
ஆனால் தான் ஓய்வு பெறும்படி தனது வைத்தியர் வழங்கிய ஆலோசனையை அடுத்து அரிசோனா சென்றதாகவும் அங்கே தன்னை தொடர்பு கொள்ள முடியாதபடி தடுத்து வைத்திருந்ததாகவும் தன்னை மற்றவர்கள் தேடிக் கொண்டிருப்பதான செய்தியை தொலைக்காட்சியிலேயே தான் கண்டதாவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
தற்போது ரிஜேயுடன் சேர்ந்து கத்தரினும் மைக்கேல் ஜாக்சனின் பிள்ளைகளின் கூட்டுப் பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்குள் கத்தரினின் மற்றப் பிள்ளைகள் மைக்கேலின் வீட்டுக்குச் சென்று பிள்ளைகளுடன் தகராறில் ஈடுபட்டதாகவும் செய்தி வெளிவந்திருந்தது.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS