Socialize

காரோடும் வீதியிலே…

சங்கமி

கோடைகாலம் முடிந்து பாடசாலைகளும் தொடங்கிவிட்டன. வேலைத்தளங்களில் விடுமுறையில்சென்றோரும் திரும்பிவிட்டனர் நகரில் வாகன நெரிசல் ஆரம்பமாகி விட்டதை கவனித்திருப்பீர்கள். புதிதாக வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் இளம் சாரதிகள் வாகனம் ஓட ஆயத்தமாக இருப்பார்கள். இவர்களுக்கு பெற்றோர் எந்தவகையில் உதவியையும் அறிவுரைகளையும் வழங்கலாம் என்று பார்ப்போம்.

எடுத்த எடுப்பிலேய தனியே ஓட்டிப் பார்க்கவேண்டும் என விரும்புவார்கள். அதற்காக கார் சாவியை ஒளித்து வைக்க முடியுமா என்ன? அதுவும் எத்தனை நாளைக்கு?

அப்படி வைத்தும் கூட சிலரது வீட்டு கராஜ் கதவுகள் உடைக்கப்பட்ட கதை, ரிவேர்ஸ்சில் எடுத்து முன்வீட்டில் சும்மா நின்ற காருக்கு இடித்த கதை, வீட்டிலிருந்த காரை பத்திரமாய் கொண்டு போய் ரோட்டுப்பள்ளத்தில் விழுத்திய கதை என இளம் சாரதிகளிடம் பல கதைகள் உண்டு.

உங்களுக்கு பிள்ளைகளில் நம்பிக்கை வர வேண்டுமானால் அவர்களிடம் ஓடும் பொறுப்பை கொடுத்துவிட்டு நீங்கள் பக்கத்தில் இருங்கள், அப்படி இருக்கும்போது உங்களுக்கு உள்ளே பதட்டமாக இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் இருங்கள். அப்போதுதான் அவர்களும் பதட்டமில்லாமல் ஓடுவார்கள்.
ஓடும்போது போன் பேசுவது, ரெக்ஸ்ட் பண்ணுவது போன்றவற்றை முற்றாக அனுமதிக்காதீர்கள். வேகக் கட்டுப்பாட்டு பலகையை அடிக்கடி அவதானிக்கச் சொல்லுங்கள்.

வீட்டுபிரச்சனைகள்ää தேவையில்லாத விவாதங்களை தவிருங்கள். ரேடியோவை பெரிய சத்தமாக வைக்காதீர்கள் இது அவர்களுக்கு கவனக்குறைவை ஏற்படுத்தும். மேலும் உங்கள் நண்பர்களையோ உறவினர்களையோ ஏற்றுவதை தவிர்ப்பதும் நல்லது. காரணம் அவர்களே உங்கள் பிள்ளையை New driver ஆ! என்று கேட்டு டென்ஷன் படுத்தி விடக்கூடும்.
மிக மிக முக்கியமாக சின்ன சின்ன பிழைகள் விட்டால் உடனே சுட்டிக்காட்டதீர்கள், நீங்களும் இதேபோல் நிறைய பிழைகள் விட்டதாக எடுத்துக் கூறலாம்.
அடுத்த படிக்கான G லைசென்ஸ்சை எடுக்க ஊக்குவியுங்கள்.

கடைசியாக முடிமானால் அவர்கள் பெயரில் சிறு சேமிப்பு ஒன்றை ஆரம்பித்து மதாமாதம் சிறு பணத்தை போட்டு அவர்கள் பெயரிலேயே சொந்தமாக ஒரு வாகனத்தை வாங்க உதவுங்கள்.

பிறகென்ன கார் திறப்பை வாசலிலேயே தொங்கவிடலாம்.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS