Socialize

கியுபெக் தேர்தலில் பிரிவினைக் வாதக் கட்சி வெற்றி

இளவழகன்

கியூபெக் மாகான தேர்தல் புரட்டாதி மாதம் 4 ஆம் திகதி (2012:09:04) நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவில் பிரிவினைவாத கட்சியான PQ 31.93% ஆதரவுடன் 54 ஆசனங்களை வென்று ஆட்சியை கைப்பற்றியது. இதுவரை ஆண்ட லிபரல் கட்சி 31.20% ஆதரவுடன் 50 ஆசனங்களை மட்டுமே வென்று தோல்வியை தழுவியது. அது மட்டுமன்றி லிபரலின் தலைவரும் இதுவரை கியூபெக் மாகாண முதவருமாக இருந்த Jean Charest யும் தோல்வி கண்டுள்ளார்.

ஆதியில் கனடாவின் மத்திய அரசியலில் conservative கட்சியில் இருந்து பின் கியூபெக் மாகாண லிபரலில் இணைந்த Jean Charest 2003, 2007, 2008 ஆம் ஆண்டுகளின் தேர்தல்களில் வென்று அம்மாகாண முதல்வர் ஆகியிருந்தார். அவர் இன்போது அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக கூறியுள்ளார்.

PQ இன் தலைவியான Pauline Marois கியூபெக் இன் முதலாவது பெண் முதல்வர் ஆவார். இவரின் கட்சி ஒரு பிரிவினைவாத கட்சி என்றாலும் அவர்கள் அறுதி பெரும்பான்மை அடையாதபடியால் பிரிவினால் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் என கருதலாம். இந்த அவையில் மொத்தம் 125 ஆசனங்கள் உண்டு. அதனால் அறுதி பெரும்பான்மைக்கு குறைந்து 63 ஆசனம்கள் தேவை. அதேவேளை ஏனைய கட்சிகள் பிரிவினையை ஆதரிக்காதவிடத்து PQ அந்த விடயத்தை கையாள பின்வாங்கும் என கருதலாம்.

இந்த தேர்தலில் புதியதோர் கட்சியும் களமிறங்கி வெற்றிவாகை சூடியுள்ளது. கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட CAQ (Coalition Avenir Quebec) வியக்கத்தக்க வகையில் 27.05 வீத ஆதரவுடன் 19 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஆகவே லிபரலும் கட்சியும் CAQ கட்சியும் உம் இணைத்தால் PQ இன் எந்த நடவடிக்கைகளையும் முறியடிக்க முடியும்.

தேர்தலில் வென்ற PQ உடனடியாக முனைய ஆட்சியாளர்களால் முன்வைக்கப்பட்ட சில சட்டங்களை இரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளது. முன்னைய லிபரல் அரசு மாணவர் வீதி போராட்டங்களை தடுக்க Bill 78 ஐ நடைமுறைபடுத்தியிருந்தது. அச்சட்டம் இப்போது இரத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு மாணவர்களின் கட்டணங்களும் அதிகரிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்படுள்ளது.

இதே Pauline Marois தேர்தல் பிரச்சாரங்களின் போது தான் வென்றால் எல்லா வேட்பாளர்களும் பிரெஞ் மொழிக்கான தராதர பரீட்சை ஒன்றில் தமது பிரெஞ்சு மொழித்திறனை நிருபிக்கவேண்டிய சட்டம் ஒன்றை கொண்டுவர உள்ளதாக கூறியிருந்தார். ஆனால் அதை ஒரு சிறுபான்மை அரசு செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியே.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS