Socialize

கியூபாவிலிருந்து அமெரிக்க வரை நீந்தும் 63 வயது பெண்

இளவழகன்


Diana Nyad என்ற பெண் ஹவானா கியூபாவில் (Havana , Cuba) இருந்து ப்ளோரிடா (Florida Key, USA) வரையான 150 km கடலை நீந்தி கடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது இவரின் நாலாவது முயற்சியாகும். அமெரிக்க பிரசையான இவர் இந்த வாரம் தனது 63 வது வயதை எட்டவுள்ளார் என்பதும் இங்கு முக்கியமாக குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் மட்டும் இரு தடவைகள் இவர் இந்த முயற்சியில் இடுபட்டிருந்தார். முன்னைய முயற்சிகளில் இவர் அரைவாசி தூரத்தை கூட கடக்கவில்லை.

இந்த முயற்சியை இவர் கடந்த சனி பிற்பகல் ஆரம்பித்தார். இவருக்கு சேவை செய்ய 50 வரையான உதவியாளர் குழு ஒன்றும் 5 படகுகளில் கூட வருகின்றது. ஞாயிறு பிற்பகல் 3:20 அவர் 38 Km வரை நீந்தியுள்ளார். சனி இரவு இவர் ஜெலி (jellyfish) களின் தாக்குதலுக்கும் உள்ளாகியிருந்தார். இந்த கடலில் பல வகையான ஜெலிகள் உள்ளன. இவற்றுள் சில ஆபத்து குறைந்தன சில ஆபத்து கூடியன.

அத்தோடு மனிதரை கொல்லக்கூடிய சுறா (shark) வகைகளை கொண்ட இந்த கடலை பாதுகாப்பு வலைக்கூடு எதுவுமின்றி நீந்தி கடந்துகொண்டிருக்கிறார். பாதுக்கப்பு வலைக்கு பதிலாக மின்னியல் உபகரணங்கள் மூலம் சிறிய அளவிலான மின் அலைகளை செலுத்தி சுறாக்களை தூர வைக்கின்றனர்.

இவரின் இந்த முயற்சிக்கு சுமார் 60 மணித்தியால நீச்சல் தேவைப்படும் எனவும் இவர் செவ்வாய் நண்பகல் அளவில் ப்ளோரிடவை அடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடல் நீரோட்டம், நீச்சல்காரரின் உடல்நலம் ஆகியன நீச்சல் வேகத்தை நிர்ணயிக்கும்.

இவர் 1979 இல் பஹாமாஸ் (Bahamas) இல் இருந்து ப்ளோரிடா வரையுமான 160 Km கடலையும் நீந்தியும் சாதனை புரிந்திருந்தார்.

1997 ஆம் ஆண்டில் Susan Maroney என்ற அவுஸ்திரேலியா நாட்டவர் ஒருவரே கியூபாவில் இருந்து அமெரிக்கா வரையான முழு தூரத்தையும் நீந்தி சாதனை படைத்திருந்தார். அவர் அதை 25 மணித்தியாலத்திலும் குறைவான நேரத்தில் செய்திருந்தார். அப்போது அவருக்கு வயது 22.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS