Socialize

குவாட்டமாலாவில் மீண்டும் வெடிக்கும் எரிமலை

இளவழகன்

குவாட்டமாலா நகரில் இருந்து சுமார் 40 km தென்மேற்காக அமைந்துள்ள Fuego எரிமலை மீண்டும் பாரிய அளவில் வெடித்துள்ளது. இந்த வெடிப்பின் சாம்பல் நிறைந்த புகை சுமார் 3 km உயரத்திற்கு எழுந்துள்ளது. இந்தப்பகுதிகளில் இருந்த 30,000 இற்கும் மக்கள் பாதுகாப்பு கருதி தூர இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதன் காரணமாக பாடசாலைகளும் பல்கலைக்கழகம்களும் மூடப்பட்டுள்ளன. எரிமலையில் இருந்து 25 km தொலைவில் Del Valle பல்கலைக்கழகம் கூட மூடப்படவேண்டியிருந்துள்ளது.

மத்திய அமெரிக்க நாடான குவாட்டமாலாவில் உள்ள இந்த எரிமலை 3763 மீட்டர் (12,346 அடி) உயரமுடையது. தினமும் மிக சிறிய அளவில் புகையை கக்கும் இந்த எரிமலை அவ்வப்போது பாரிய அளவில் வெடிப்பதுண்டு. இந்த வருடம் வைகாசி மாதத்திலும் இது வெடித்திருந்தது.

1974 ஆம் ஆண்டு ஐப்பசி 14 ஆம் திகதி இந்த எரிமலையில் ஏற்பட்ட வெடிப்பு சுமார் 11 km உயர சாம்பல் நிறைந்த புகையை கக்கியிருந்தது.

குவாட்டமாலா நகரின் விமான நிலையம் தொடர்ந்து இயங்கினாலும் இந்த எரிமலைக்கு அண்மித்து செல்லும் விமான போக்குவரத்து பாதைகளை பயன்படுத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. 1982 ஆம் ஆண்டு British Airways இற்கு சொந்தமான 747 விமானம் ஒன்று லண்டன் இல் இருந்து ஆக்லாந்து செல்கையில் இந்தோனேசியாவின் எரிமலை சாம்பல் புகைமண்டலம் ஒன்றில் சிக்கி பாரிய விபத்துவரை சென்றது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் இவ்விமானம் விமானிகளினதும் விமான நிலையத்தின் அதிகாரிகளினதும் திறமையால் பாதுகாப்பாக இந்தோனேசியாவில் தரையிரங்கியிருந்தது.

இந்த வெடிப்பு மேலும் 12 மணித்தியாலம்கள் வரை நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில தகவல்களின்படி எரிமலை சாம்பல் 80 km தூரத்திற்கும் அப்பால் வீழ்ந்துள்ளது. இவ்வாறான சாம்பல் பறக்கும் திசை, தூரம், பறக்கும் வேகம் என்பன அப்பகுதியில் அடிக்கும் காற்றை பொறுத்தது.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS