Socialize

கூடன்குளம் அணு மின்நிலையம் எங்கள் கோடிக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்துமா…?

அணு சக்தி என்ற அரக்கன்

 

சிவா ஈஸ்வரமூர்த்தி
(Picture courtesy:Times of India)
கிரோசிமா, நாகசாக்கியில் நடந்தது துன்பியல் மட்டும் அல்ல மனித குலத்திற்கு கிடைத்த சாபம் கூட. தமிழ் நாட்டின் கூடன்குளத்து அணு மின்நிலையத்தால் ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் எங்கள் தாயகத்தின் கோடிக்குள்ளும் கொழுத்திப் போடுமா? அணு மின்நிலையத்தில் விபத்து நடந்தால் இதற்கான வாய்ப்புக்களை மறுப்பதற்கு இல்லை. கூடவே சம்பூரின் அனல் மின்நிலையம் சுற்று சூழல் மாசுபடுதல் என்பதைத் தடுத்து நிறுத்தும் தொழில் நுட்பத்தை தன்னகத்தே கொண்டிருந்தால் பாதிப்புக்கள் பாரியளவில் இல்லை. இதில் பாரம்பரியமாக வாழ்ந்த மக்களின் இருப்பிடங்கள் பயன்படுத்தப்படுதல், அது தமிழ் பேசும் மக்களின் நிலங்கள் என்ற உணர்வுபூர்வமான விடயங்களுக்கு அப்பால் கூடம்குளம் போன்று அணு மின்நிலையம் அல்ல இது. சம்பூரில் அமைக்கப்பட இருப்பது அனல் மின்நிலையம். நம்ம ஊரில் 1960 களில் ஓடிய ‘கரிக் கோச்சு’ போன்ற தொழில் நுட்பத்தைக் கொண்டது இது. இவ் அனல் மின்நிலைய செற்பாட்டில் சுற்றுச் சுழலில் கவனம் செலுத்தாவிடின் 1970 களில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை பகுதியெல்லாம் எங்கள் பனை மரங்கள் எங்கும் நீங்காத சீமந்து புழுதி படிந்தது போன்ற நிலமைகளே சம்பூர் சுட்டு வட்டாரத்தில் கரித்துகள்களால் எற்பட வாய்ப்புக்கள் உண்டு. மற்றயபடி அணு கொடுக்கும் அபாயச்சங்கு அனல் மின்நிலையங்களால் ஏற்படப் போவது இல்லை.

தமிழ் நாட்டின் கூடன்குளம் அணு மின்நிலையத்திற்கு ஆதரவான, எதிரான போராட்டங்கள், தீர்மானங்களில் பிராந்திய (தமிழ்நாடு) அரசியலும் பின்னிப் பிணைந்துள்ளது. மேலும் ரஷ்யாவின் தொழில் நுடபத்தினால் நிறுவப்படுவதில் அமெரிக்காவிற்கு இருக்கும் விரும்பம் இன்மை தமிழ் நாட்டில் உள்ள என்ஜிஓ களினால் எதிர்ப்பு என்ற வடிவங்களால் வெளிபடுத்த அமெரிக்காவினால் ஊக்கிவிக்கப்படும் என்பதை மறுப்பதற்கும் இடமில்லை. இதில் அப்பாவிப் பொது மக்களை பகடக்காய்களாக பாவிக்க இத்தரப்புகள் முயலும். இதில் வைகோ களும் சீமான் களும் அதிகம் ஈடுபாடுகாட்டாவிட்டாலும் சிறிதளவு குளிர் காய முற்படுவர். இலங்கையில் உள்ள மக்களுக்கு இவ் அணு உலையில் விபத்து எற்பட்டால் எற்படும் பாதிப்புக்களை பற்றி அதிகம் சிந்திக்க வாய்ப்புக்கள் குறைவு. ஆனால் இந்தக் கூடன்களத்தை இலங்கை, இந்தியா இடையே நடைபெற்று வரும் பனிப் போரை நிஜப் போராக மாற்ற சிங்கள தீவிரவாத சக்திகள் முயலும், முயன்று கொண்டிருக்கின்றன.

இன்று உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் அரக்கன் என்றால் அது அணு சக்திதான். அணு சக்தியை ஆக்கத்திற்கும் பயன்படுத்தலாம். அழிவிற்கும் பயன்படுத்தலாம். இந்நிலையில் நாம் எவ்வாறு அணு சக்தியை அரக்கன் என்று மட்டும் விழிக்கலாம். காரணம் இருக்கின்றது. ஆக்கத்திற்கு பயன்படும் இடங்களில் எல்லாம் விபத்துக்கள் ஏற்படும் அபாயங்கள் நிறையவே இருக்கின்றன். அணு சக்தியைப் பயன்படுத்தும் ஆக்கத்தின்போது விபத்து நடைபெற்றால், அது பேரழிவை ஏற்படுத்தும். இந்த விபத்தின் அழிவுகளை யாரும் தடுத்து நிறுத்த முடியாது, மட்டுப்படுத்த முடியாது. காரணம் விபத்துக்களினால் எற்படும் அபாயம் கணநேரத்தில் நிகழும் அதியுயர் வெப்பத்தினால் ஏற்படுவது முதல்காரணம், குறிப்பிட்ட சுற்றப்புறப் பெரும் பகுதி கண நேரத்தில் பஸ்பம் ஆகிவிடும். கூடவே கதிர் வீச்சுத் தாக்கங்கள் காற்றிலும், நீரிலும் உடன் கலந்துவிடும் காற்றும், நீரும் (சமுத்திரத்தின் நீர்) உலகம் பூராகவும் ‘விசா’ இன்றி தங்கு தடையின்றி பயணிக்கக் கூடியவை.

1 2 3 4 5

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS