Socialize

கேள்விக்குறியாகும் RIM இன் எதிர் காலம்

இளவழகன்
முதலில் cell phone இல் email ஐ வாசிக்கும் வசதியை உருவாக்கிய இந்த நிறுவனம், நீண்ட காலமாக இந்த வர்த்தகத்தில் முன்னணியிலும் இருந்து வந்தது. அனால் இப்போது Apple iPhone மற்றும் Samsung Galaxy போன்றவற்றின் அதீத பிரபல்யத்தினால் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. RIM 2009 ஆம் ஆண்டளவில் சுமார் 20% பாவனையாளர்களை (20% market share) தன்னகத்தே கொண்டிருந்தது. ஆனால் இன்று 5% ஐ கூட தக்கவைக்க முடியாமல் திணறுகிறது. இந்த நெருக்கடிகளில் இருந்து தப்புவதற்கு ஒருசில பாரிய முன்னெடுப்புகளை RIM செய்யவேண்டி உள்ளது.

முதலாவது பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பது. அதை RIM செவ்வனே செய்து வருகிறது. பல ஆயிரம் பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. ஆனால் இது ஒரு தற்காலிக பரிகாரமே. ஒரு காலம் சுமார் 20,000 பணியாளர்களை கொண்டிருந்த இந்நிறுவனம் தற்போது ஏறக்குறைய 17,000 ஐ மட்டுமே கொண்டுள்ளது. இந்த எண்ணிக்கை விரைவில் 10,000 ஆக குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அளவிற்கு அதிகம் பணியாளர்களை குறிப்பதுவும் நன்றன்று.

இரண்டாவது போட்டி நிறுவனம் ஒன்றுடன் கூட்டு சேர்வது. இது சம்பந்தமாக பல செய்திகள் அண்மையில் வெளிவத்திருந்தன. அனால் ஆதியில் RIM முன்னணியில் இருந்த போது கூட்டு சேர விரும்பிய Samsung போன்ற மாற்று நிறுவனங்கள் கூட இப்போது அதில் பாரிய அக்கறை காட்டவில்லை. அண்மையில் RIM-Samsung கூட்டு பற்றி செய்திகள் வெளியாகி இருந்தாலும், Samsung அதை மறுத்திருந்தது. Apple இன் iPhone களையே ஆட்டம் காணவைக்க தொடங்கிய Samsung தனற்கு அழிந்து போகும் RIM உதவி தேவை இல்லை என கருதலாம். ஆனால் Samsung இற்கு அதிக பலன் ஏற்படின் தன் முடிவை மாற்றி உறவை ஏற்படுத்தக்கூடும்.

மூன்றாவது RIM இன் தொழில்நுட்பங்களை மற்றைய நிறுவனக்கள் பாவிப்பதற்கு அனுமதி வழங்கி அதன் மூலம் வருமானம் பெறுவது. இதையும் RIM செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. RIM இன் புதிய BB10 Operating system (OS) இப்போது மாற்று நிறுவனக்களுக்கு அனுமதியுடன் கிடைக்கவுள்ளது. இந்த BB10 OS RIM இனால் சிறிது காலத்தின் முன் (2010) கொள்வனவு செய்யப்பட QNX OS ஐ அடிப்படையாக கொண்டது. UNIX ஐ ஒத்த QNX சில கனடியர்களால் ஒட்டவாவில் 1980 களில் உருவாக்கப்பட்டது. RIM தனது முதாலவது BB10 ஐ அடிபடையாகக் கொண்ட cell phone களை 2013 இல் அறிமுகப்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது BlackBerry OS ஐயே இன் நிறுவனம் பயன்படுத்துகிறது. BB10 ஐ பாவிப்பதற்கு மாற்று நிறுவனக்கள் தற்போது முன்டியடிப்பதாக தெரியவில்லை அனால் பின்னர் சில நிறுவனக்கள் முன்வரக்கூடும்.

நான்காவது RIM இன் சில வர்த்தக பிரிவுகளை வேறு நிருவனம்களுட்கு விற்பனை செய்வது. RIM இன் பிரதான இரண்டு பிரிவுகள் BlackBerry phone தயாரிப்பு பிரிவும் Messaging Network என்ற சேவை வழங்கும் பிரிவும் ஆகும். Messaging Network என்பது உலகெங்கும் email server களை நிறுவி அவற்றை அந்நாட்டு cell-phone நிருவனக்களுடன் இணைத்து சேவை வழக்கும் பிரிவு ஆகும். இந்த கட்டுமானத்தை அமைக்க RIM நீண்ட காலமும் அதிக பணமும் செலவிட்டிருந்தது. இந்த பெறுமதிமிக்க பிரிவை கொள்வனவு செய்ய IBM விருப்பம் கொடுள்ளது. இதை செய்வது RIM தனது அரை பாகத்தை இழப்பது போலாகும். ஆனால் வேறு வழி இல்லையேல் இதை தன் செய்ய வேண்டும்.

RIM இந்த நடவடிக்கைகளில் புத்திசாலித்தனமாக செயல்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். தவறுகள் செய்து பின் அத்தவறுகளை திருத்த ரின் இற்கு நேரமில்லை. உரிய நடவடிக்கைகளை உரியநேரம் எடுக்காவிடின் Nortel இற்கு நடந்ததுதான் ரிம் இற்கும் நடக்கும்.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS