Socialize

கொடுமை கண்டும் குரல் எழுப்பா மனித உரிமைவாதி

மித்திரன்

பர்மாவிலுள்ள எட்டு லட்சம் முஸ்லிம் சிறுபான்மையினர் பலவிதமான ஒடுக்குமுறைக்கு உள்ளக்கப்படுகிறார்கள். திருமணம் செய்வதற்கும் இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெறுவதற்கும் தங்களது கிராமத்தை விட்டு வெளியேறுவதற்கும் அனுமதி பெறவேண்டிய அளவிற்கு ஒடுக்குமுறை தாண்டவமாடுகிறது.

பர்மாவின் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக உலகெங்கும் அறியப்பட்ட சான் ஸூ கி ,அங்கு முஸ்லிம்கள் தாக்கப்பட்டது குறித்து மௌனமாக உள்ளார். மனித உரிமைக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் போராடியதற்காக நோபல் பரிசு பெற்ற சான் ஸூ கி, பர்மாவிலே ரோஹிங்க்ய என்ற முஸ்லிம் சிறுபான்மையினர் புத்த மதத்தை சார்ந்த பெரும்பன்மயினரினால் தாக்கப்பட்டது குறித்து மௌனமாக உள்ளதினால் பலரின் விமர்சனத்திற்கு உள்ளக்கப்பட்டிருக்கிறார்.

ரோஹிங்க்ய முஸ்லிம்களின் விடயத்தில் சான் சூ கி முக்கியமான பங்கு வகித்து சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்காமை குறித்தும் மனித உரிமை அமைப்புக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளன. அரசியல் கைதியாக இருந்து அரசியல் வாதியாக மாறியுள்ள சூ கீ, முஸ்லிம்கள் தாக்கப்பட்டமை குறித்து கருத்து தெரிவிப்பதன் மூலம் நடக்க இருக்கும் தேர்தலில் அரசியல் ரீதியாக எதுவித லாபமும் ஏற்படப்போவதில்லை என்ற காரணத்தினாலேயே மௌனமாக இருப்பதக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

பசி வந்தால் பத்தும் பறக்குதோ இல்லையோ, பதவி ஆசை வந்தால் எல்லாம் பறந்துவிடும்.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS