Socialize

சீனக்கடற்படை சர்ச்சைக்குரிய தீவுகள் நோக்கி விரைவு

இளவழகன்

இன்று வெள்ளிக்கிழமை (2012:09:14) ஆறு சீன கடல்படை கப்பல்கள் சர்ச்சைக்குரிய Diaoyu தீவுகள் நோக்கி விரைந்துள்ளன. Diaoyu என்று சீனாவிலும் Senkaku என்று ஜப்பானிலும் அழைக்கப்படும் இந்த தீவுகளுக்கு மேற்கூறிய இரு நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன. உண்மையில் இந்த சர்ச்சை சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான ஓர் உரிமை பிணக்கு என்றாலும் திரைமறைவில் இது சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பொருளாதார நோக்கிலான பலப்பரீட்சையே. தாய்வானை ஐ.நா. சட்டப்படி தனதெனும் சீனா தாய்வான்னுக்கு அருகில் உள்ள இந்த தீவுகளையும் தனதென்கிறது.

சில தினங்களுக்கு முன் ஜப்பானிய மத்திய அரசு, இந்த தீவுகளை அதன் உரிமையாளர் என சொல்லப்படும் ஜப்பானியர் ஒருவரிடம் இருந்து US$ 26 மில்லியன் இற்கு வாங்கியிருந்தது. அதன் பின்னரே சீனா இவ்வாறு யுத்த கப்பல்களை அனுப்புகின்றது. அதற்கு முன் சித்திரையில் ஒரு கடுமைவாதியான Tokyo வின் ஆளுநர் Shintaro Ishihara இந்த தீவுகளை ஒரு துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்போவதாக கூறியிருந்தார்.

1895 ஆம் ஆண்டு முதல் இரண்டாம் உலப்போரில் தோற்கும் வரை ஜப்பானே இந்த தீவுகளை கடுப்பாட்டில் வைத்திருந்தது. இரண்டாம் உலக யுத்த இறுதியில் ஜப்பான் சரணடைந்த பின் இவை அமெரிக்காவின் கட்டுபாட்டில் இருந்தது. பின்னர் 1972 ஆம் ஆண்டில் அமெரிக்க இத்தீவுகளை மீண்டும் ஜப்பான் வசமாக்கியது. ஆனால் சீன இந்த தீவுகள் 15 ஆம் நூற்றாண்டில் இருந்தே தம்வசம் இருந்ததாயும் அதை ஜப்பான் கைக்கொண்டதாகவும் கூறுகிறது. இந்த காலங்களிலேயே ஜப்பான் தாய்வான், கொரியா, சீனா போன்ற பகுதிகளை கைக்கொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பாறைகள் நிறைந்த இந்த தீவுகள் எந்தப்பயனும் அற்றதாயினும் இவற்றை உரிமை கொள்பவருக்கு இதை சுற்றி 200 மைல் தொலைவுவரை பொருளாதார உரிமைகள் கிடைக்கும். இத கடலுக்கு அடியில் பாரிய அளவில் எரிபொருள்கள் இருப்பது நாம் அறிந்ததே.

அமெரிக்க அரச செயலாளர் Hillary Clinton பாதுகாப்பு செயலாளர் Leon Panetta தாம் இந்த விவகாரத்தில் பக்கசார்பு காட்டோம் என்று கூறினாலும் இந்த விவகாரத்தை ஐ.நா. அல்லது ASEAN விவகாரம் ஆக்க முனைகிறது. அவ்வாறு செய்வதன் மூலமே அமெரிக்க இந்த விவகாரத்தில் ஒரு பங்காளி ஆக முடியும். ஆனால் சீன இது இரண்டு நாடுகளுக்குள்ளான பிணக்கு என்றும் அதில் மற்றவர்களுக்கு தலையிட உரிமை இல்லை என்றும் கூறுகிறது.

உலகத்திலேயே இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவே ஜப்பானின் முதலாவது பெரிய வர்த்த உறவு நாடாகும். ஆண்டு ௨௦௧௧ இல் இவற்றுக்கிடையே U$ 345 பில்லியன் பெறுமதியான வர்த்தகம் நடைபெற்றது.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS