Socialize

சீமானும் யாழ்மதியும் திருமணமா?

சிறை மீண்ட செம்மல் சீமான் மீண்டும் சம்சாரச் சிறைக்குள்?

ஜோர்ஜ்

தேசியத் தலைவர் இறக்கவில்லை என்று கூறி விட்டு, புலிகளின் போராட்டத்தை நாம் தமிழர் இயக்கம் தொடரும் என்று கூறி புலன் பெயர்ந்த தமிழர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட இயக்குனர் சீமானின் இதயத்தை யாரோ ஒரு ஈழத் தமிழர் கொள்ளை கொண்டு விட்டார் போலிருக்கிறது. இயக்குனர் சீமான் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிரெண்ட்ஸ் படத்தில் நடித்த விஜயலட்சுமி சமீபத்தில் சீமான் மீது பொலிஸில் புகார் செய்திருந்தார். தன்னோடு சீமான் கூடி வாழ்ந்ததாகவும் தன்னைத் திருமணம் செய்வதாக உறுதியளித்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

அதை மறுத்த சீமான் தற்போது தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் யாழ்மதியைத் திருமணம் செய்யவிருக்கிறார் என்று கோடம்பாக்கத்தில் கசிந்த தகவல் ஒன்று தெரிவிக்கிறது. சீமான் இந்தச் செய்தியை இன்னமும் மறுக்கவில்லை.

ஒலிவாங்கியைப் பீரங்கியாக்கி புரட்சி புரிந்த அண்ணாச்சி கொஞ்ச நாளாக அடக்கி வாசிக்கிறார் என்று பார்த்தால் ஒருவேளை கால் கட்டு விவகாரம் காரணமோ? அல்லது இந்தச் சீறும் புலி சீமான் கொஞ்ச நாளாக பதுங்கும் புலியாக மெளனமாக இருப்பதற்கு காரணம் புரட்சித் தலைவியோ?

ஏம்பா எனக்கு அடிக்க வாறீங்க?
நான் சொல்லலைப்பா! நக்கீரனின் இணையத் தளம் அப்படித் தான் சொல்கிறது.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS