Socialize

சோடியைத் தேடுது சொக்ஸ்!

சங்கமி

நீங்கள் அன்றாடம் பாவிக்கும் காலுறைகள் அடிக்கடி தொலைந்து போகின்றதா?, அல்லது ஒன்றினுக்கொன்று பொருத்தமில்லாத காலுறைகளை அணிகிறீர்களா? குளிர்காலமும் வருகிறது கவலையை விடுங்கள்.
இரண்டு மரக் கூடைகளை எடுங்கள், ஒன்றில் துவைத்த சொக்ஸை சோடிகளாக இணைத்து போட்டுவிடுங்கள், மற்றைய கூடையை பக்கத்தில் வைத்துவிடுங்கள். இரண்டு கூடைகளையும் காலணிகள் வைக்கும் இடத்திற்கு பக்கத்தில் அல்லது நடைபாதையில் வைத்தால், காலுறைகளை எடுப்பதற்கு இலகுவாக இருக்கும், அதுவும் சு10டாக்கும் கருவிக்குப் பக்கத்தில் வைத்தால் குளிர் காலத்தில் காலுறைகளும் சு10டாக அணிய இதமாக இருக்கும்.
வீட்டினுள் நுழையும்போது கழற்றி மற்றைய கூடைக்குள் போட்டுவிடுங்கள். காலுறைகளும் இணைபிரியாமல், வீடு முழுக்க இழுபடாமல் இருக்கும், வீட்டில் இருப்பவர்களின் பாவனைக்கு ஏற்ப கூடைகளின் அளவை தெரிவு செய்யுங்கள். நடைமுறைப் படுத்தி பாருங்கள் இதன் சுலபம் புரியும்.

கூடைகளை எங்கே வாங்கலாம்?
கனேடியன் ரயர், வால்மார்ட் , டாலர் ஸ்டோர், சைனீஸ் கடைகளிலும் வாங்கலாம்.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS