Socialize

தல ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட இயக்குனர்

மண் கவ்விய பில்லா 2

ஜோர்ஜ்

தல அஜித்தின் 51வது படமான பில்லா 2 பெரும் எதிர்பார்ப்புகளுடன் பிரமாண்டமாக வெளியிடப்பட்ட போதும், ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் சாடப்பட்டிருந்தது. படத்தில் சரியான கதை இல்லாததால், அஜித்தின் நடிப்பாலோ, பஞ்ச் டயலாக்குகளாலோ படத்தை ஓட்ட முடியவில்லை. படம் மூன்று நாட்களிலேயே மண் கவ்வியது.

தோல்வியைப் பற்றி தயாரிப்பாளரோ, இயக்குனரோ வாயே திறக்கவில்லை. இப்போது இயக்குனர் சக்ரி தொலத்தி மெளனம் கலைத்திருக்கிறார். ட்விட்டரில் குறுந்தகவல் விட்ட சக்ரி, படத்தைப் பார்த்தவர்களுக்கு நன்றியும் சொல்லி,படம் பிடிக்காமல் போனவர்களுக்கு அவர்களை ஏமாற்றியதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளார்.

இதுவரையில் சக்ரி ஒரேயொரு தமிழ்ப் படம் தான் இயக்கியுள்ளார். கமல் நடித்த உன்னைப் போல் ஒருவனின் இயக்குனர் சக்ரி என்ற போதிலும் அதை முழுமையாக இயக்கியது கமல் என்றே கூறப்படுகிறது.

படத்தின் தோல்வி பற்றி தல வாயே திறக்கல. பில்லா 2 முடிந்த பின்னால் தல இப்போது இங்கிலிஷ் விங்கிலிஷ் என்ற சிறிதேவியுடன் நடிக்கும் படம் ஒன்றிலும் நயன்தாராவுடன் விஷ்ணுவர்த்தனின் படம் ஒன்றிலும் நடிக்கிறார். தலைக்கு என்ன கவலை, நடிக்க நடிக்க பணம்!

நல்ல காலம், இயக்குனர் மன்னிப்புக் கேட்டார். இல்லேன்னா தல ரசிகர்கள் தலையையே எடுத்திருப்பார்களோ?

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS