Socialize

தேர்தல் முறைமையில் மாற்றங்கள் : புதிய சட்டமூலம் நிறைவேற்றப்படும்.

தாயகத்திலிருந்து விஜய்

உள்ளுராட்சி மன்றங்கள்(விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம், உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்ட மூலம் என்பன வரும் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளன என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தனா தெரிவித்திருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட இவ்விரு சட்டமூலங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் தினேஷ் குணவர்த்தனா இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

புதிய திருத்தத்தின் படி 1978 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு இதுவரை பின்பற்றப்பட்டு வந்த விருப்பு வாக்கு முறைமைக்குப் பதிலாக 70 சதவீதம் தொகுதிவாரி அடிப்படையிலும், 30 வீதம் விகிதாசார அடிப்படையிலும் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் வகையிலான தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்படுவுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களுக்கான பிரதிநிதிகைளத் தெரிவு செய்கையில் இத்தேர்தல் முறைமை நடைமுறைக்கு வரும். விருப்பு வாக்கு அடிப்படையிலான தேர்தல் முறைமை மூலம் கட்சி உறுப்பினர்களிடையே பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தமையும் அன்மைக்காலமாக விமர்சனத்திற்குள்ளாகியிருந்த நிலையில் இத்திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.
புதிய தேர்தல் முறைமை மூலம் சிறுபாண்மைக் கட்சிகளும் சிறிய கட்சிகளும் பாதிக்கப்படும் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டிருந்தது. இக்கட்சிகள் தொகுதி அடிப்படையிலான தேர்தல் மூலம் பிரதிநிதிகளை இழக்க வேண்டியேற்படும் எனக்கூறப்படுகிறது. ஆயினும் 30 வீத விகிதசார முறை தொடர்ந்தும் இருப்பதனால் பாதிப்புக்கள் எற்படாது என அரசாங்கத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திருத்தம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சில திருத்தங்களை முன்வைத்திருக்கிறது. புதிய திருத்தச் சட்டமூலமாக எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யும் குழுவில் தமிழ்ப் பிரதிநிதி ஒருவர் இடம் பெறவேண்டும், எல்லைகள் மீள்நிர்ணயம் செய்கையில் தமிழ்ப் பிரதேசங்கள் விடயத்தில் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும் ஆகிய திருத்தங்களை கூட்டமைப்பு முன்வைத்திருக்கிறது. கூட்டமைப்பு முன்வைத்துள்ள திருத்தங்களை உள்ளடக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் பெரும்பாலும் அத்திருத்தங்கள் உள்ளடக்கப்படும் எனவும் தினேஷ் குணவர்த்தனா தெரிவித்திருக்கிறார். இத்திருத்தங்கள் தொடர்பில் ஐ.தே.கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது எனவும் தினேஷ் குணவர்த்தனா தெரிவித்திருக்கிறார்.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS