Socialize

நகைப் பைத்தியம்

சுமதி

“இவள் சரியான நகைப் பைத்தியம்” என்று பெண்களைப் பார்த்துச் சொல்லும் வழக்கம் எமது சமூகத்தில் காலம் காலமாக இருந்து வருவதொன்று. நகை மோகம் என்பது உலகிலேயே ஆண்களைவிட பெண்களுக்குத்தான் அதிகமிருக்கின்றது என்பது தவிர்க்க முடியாத உண்மை. கலாச்சாரம் இதில் பெரும்பங்கை வகித்தாலும், பெண்ணுடல் என்பது இயற்கையிலேயே அலங்காரங்களுக்கானது என்று நம்பப்படுகின்றது. பெண்களை நம்பவும் வைக்கின்றது. முடிஆட்சிக் காலங்களில் அரசன் தொடக்கம் அரசசபை ஊழியர்கள் வரை பெண்களுக்கு நிகராக ஆபரணங்களை அணிந்து வந்தார்கள் என்பதனையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். காலணித்துவ ஆட்சிக்குப் பின்னர் அனேக நாடுகளில் ஆண்கள் தனது சௌகரியங்களுக்கான தமது உடை அணியும் பழக்க வழக்கங்களை முற்றாகவே மாற்றியமைத்துக் கொண்டதனால் அவர்கள் ஆபரணங்கள் அணிவதும் மிகக் குறைவாகிப் போனது. இருந்தும் உலகெங்கும் பெண்களே கலாச்சாரப் பாதுகாவலர்களாகப் பார்க்கப்படுவதனால் அவர்களுக்கு இந்த மாற்றத்திற்கான சலுகைகள் அவர்கள் சமூகங்களினால் இலகுவில் வழங்கப்படவில்லை. பெண், பெண்மை என்பன ஆண்களின் தேவையைப் பூர்த்திசெய்யும் போதைப் பொருளாகவும், இதன் மூலம் வியாபாரிகளின் இலக்கு பெண்களை நோக்கியிருப்பதாலும் பெண்களிற்கு அலங்காரம் என்பதும் ஊக்கப்படுத்தப்படுகின்றது.

இன்றைய நாகரீக உலகில் பொன்நகை என்பதின் பாவனை மிகவும் மட்டுப்படுத்தப்பட்டு என்றுமில்லாத வகையில் உலகெங்கம் “இமிட்டேஷன்” என்று அழைக்கப்படும் உலோக, பிளாஸ்டிக் நகைகளின் பாவனை மிகவும் அதிகரித்திருக்கின்றது. இதனால் கல்லூரிகள்,வேலைத்தளங்களுக்குக் கூட அனைத்துப் பெண்களும் அதிகளவிற்கு நகைகளை அணிந்து செல்கின்றார்கள். இருந்தும் பெண்களுக்குச் சீதணமாக வழங்கப்படும் நகைகளின் அளவில் மாற்றம் ஏதும் இடம்பெறவில்லை.

சரி நாகரீகம், சீதணம், கலாச்சாரம், மூலதனம் என்று பலவகைகளில் நகைகள் பார்க்கப்பட்டாலும் பெண்கள் அதிக அளவிற்கு பொன் நகைகளையோ, இல்லாவிட்டால் இமிடேஷன் நகைகளையோ அணிவது என்பது தம்மை அழகு படுத்தி ஆண்களைக் கவர்வதற்காகத்தான் என்று எப்போதுமே பார்க்கப்பட்டு வருகின்றது. பெண்நிலைவாதிகளும் இக்கூற்றை முற்றாக ஆதரிக்கின்றார்கள்.

நகைகள் அணிவதன் மூலம் பெண்கள் அடிமைப் படுத்தப்படுகின்றார்கள். பாலியல் பண்டமாகப் பார்க்கப்படுகின்றார்கள் என்பதை எடுத்துக் கூறிப் பெண்களுக்கு ஆபரணங்கள்ää அலங்காரங்கள் மேல் உள்ள அளவுக்கதிகமான ஆசையை என்றுமே மட்டுப்படுத்திவிட முடியாது. அலங்காரம் என்பது பெண்களுக்கு அவர்கள் வளர்ந்த சு10ழல் பழகும் மனிதர்களை, அவரவர் பொருளாதாரநிலை பொறுத்து வேறுபடுகின்றது. நகைகள் அலங்காரங்கள் என்பனவற்றை விரும்பாத பெண்கள் பலர் அளவிற்கதிகமாக தம்மை அலங்காரப்படுத்திக்கொள்ளும் பெண்களோடு மிகநெருங்கிய நட்போடு இருப்பதைக் காணமுடிகின்றது. அவர்களிடையே இந்த அலங்காரம் என்பது தடையாக இருந்ததில்லை. அதே போல் தம்மை அலங்காரப் படுத்திக்கொள்பவர்கள் பிற்போக்குத் தன்மை கொண்டவர்கள், அலங்காரம் செய்யாது மிகஎளிமையாக இருப்பவர்கள் அறிவாளிகள் முற்போக்குத்தனம் கொண்டவர்கள் என்ற ஒரு புரிந்துணர்வும் பலரிடம் இருக்கின்றது. பெண்கள் தம்மை அலங்காரப்படுத்திக்கொள்வது என்பது அவரவர் தனிப்பட்ட விடையம். இதில் அவர்களை அடையாளப்படுத்திக் கணிப்பது என்பது நாகரீகமற்றது என்பதே என் தனிப்பட்ட கருத்து. அத்தோடு பெண்கள்ää முக்கியமாக இளம் பெண்கள் தாம் ஏன் ஆபரணங்களை அணிந்து தம்மை அலங்காரப்படுத்திக் கொள்கின்றோம், என்பதில் தெளிவாக இருப்பது நல்லது. பிறர் இதுபற்றிக் கேள்வி எழுப்பும் போது அதற்குத் தகுந்த முறையில் தெளிவாகப் பதிலளிக்கப் பழகிக்கொண்டால் அவர்களை மற்றவர்கள் கேலி செய்வதையோ,உபயோகப்படுத்திக் கொள்வதையோ தவிர்க்க முடியும். பெண்கள் தனக்காக, தன் விருப்பத்திற்காக, தனக்குப் பிடித்திருக்கின்றது என்பதற்காக, தன்னால் இவற்றைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது என்பதில் தெளிவாகத் தன்நம்பிக்கையுடன் இருக்கும் வரை அவர்களை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS