Socialize

பரவிவரும் புதிய VoIP தொலைபேசிகள்

இளவழகன்


Alexander Graham Bell தொலைபேசியை கண்டுபிடித்த நாள்முதல் மிக அண்மைக்காலம்வரை, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலக மக்களின் தொலைபேசி சேவைக்கு அடிப்படையாக இருந்து வந்தது Bell இனால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பழைய’ தொழில்நுட்பம். இந்த தொழில்நுடப்பத்தை POTS (plain old telephone service) அல்லது PSTN (public switched telephone service) சேவை என அழைப்பர்.

இந்த பழைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒருவர் தொலைவில் உள்ள மற்றொருவருடன் கதைக்கும்போது அவர்களின் தொலைபேசி இரண்டுக்கும் இடையில் இரண்டு செப்பு இழைகள் (twisted pair) அவைகளின் பாவனைக்கு மட்டுமென ஒதுக்கப்படும். அவர்கள் தொடர்பை துண்டிக்கும்போது இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இழைகள் மற்றையோரின் பாவனைக்கு பயன்படும். அத்துடன் இங்கு உங்களின் ஒலி பெரும்பாலும் Analog signal வடிவிலேயே இழைகளின் ஊடு செலுத்தப்படும்.

உதாரணமாக கனடாவில் இருந்து ஒருவர் இலங்கைக்கு தொலைபேசி எடுக்கும்போது அந்த சம்பாசணைக்கு பயன்பட மட்டுமென இரண்டு இழைகள் கனடாவில் இருந்து இலங்கைவரை ஒதுக்கப்படும் (dedicated lines). உண்மையில் இது கனடாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள பல நாடுகளின் தொலைதொடர்பு நிறுவன இழைகளை இணைத்தே உருவாக்கப்படும். இவ்வாறு செய்வதை circuit-switched தொழில்நுட்பம் என்பர். இவ்வாறு உங்களுக்கென்றே இழைகளை அமைப்பதாலும், பலநாட்டு நிருவனம்களின் சேவைகளை பயன்படுத்துவதாலும் இவ்வகை தொலைபேசி கட்டணம் மிக அதிகம்.

ஆனால் இன்று பரவிவரும் புதிய VoIP (voice-over I-P) தொலைபேசிகள் Internetஐ பயன்படுத்துகின்றன. இந்த தொழில்நுட்பம் பல விடயம்களில் ‘பழைய’ தொலைபேசியில் இருந்து மாறுபடும். இந்த ‘புதிய’ முறை தொலைபேசி இணைப்பில் உங்களுக்கென்று இழைகள் (dedicated line) ஒதுக்கப்படுவது இல்லை. அத்துடன் தொலைபேசியை அழைப்பவரினதும் அழைக்கப்படுபவரினதும் தொலைதொடர்பு நிறுவனம்கள் தவிர்ந்த வேறு எந்த நிறுவம்களும் சேவை இங்கு பயன்படுத்துவது இல்லை. அதனாலேயே இப்போது தொலைபேசி கட்டம்கள் மிக குறைவு. Skype போன்ற சேவைகளும் இவ்வகையை சார்ந்ததே.

இந்த புதிய தொழில்நுட்பத்தில் Analog முறையில் உங்களின் ஒலியை உள்வாங்கி, பல்லாயிரம் துண்டம்களாக துண்டாடப்பட்டு (digitized), சிறு கூறுகலாக்கப்பட்டு (IP packets) மறுமுனை செலுத்தப்படும். மறுமுனையில் மீண்டும் இந்த துண்டம்கள் ஒழுங்கில் இணைக்கப்பட்டு Analog ஒலியாக வழங்கப்படும்.

மிக சில இடம்களிலேயே தற்போது 100% VoIP சேவை, அதாவது அழைப்பவரிடம் இருந்து அழைக்கப்படுபவர் வரையான முழு இளைப்பும் VoIP சேவை, பயன்பாட்டில் உள்ளது. அவ்வாறு செயல்பட இரு முனைகளும் புதிய VoIP தொலைபேசிகளை (அல்லது பழைய தொலைபேசியின் சிக்னலை மாற்ற ஒரு மாற்றியை) பயன்படுத்த வேண்டும். உலகம் முழுவதும் அவ்வாறு நவீனமயப்படுத்தப்படவில்லை.

பல இடம்களில் இரு முனைகளிலும் பழைய முறை சேவையையும் இடையில் புதிய VoIP சேவையையும் பயன்படுத்துகின்றனர். அதாவது கனடாவில் இருந்து இலங்கைக்கு தொலைபேசி எடுக்கும் போது கனடாவில் உங்கள் வீட்டில் இருந்து உங்களுக்கு சேவை வழங்கும் நிருவனம்வரையும் பின் இலங்கையில் அழைக்கப்பட்டவருக்கு சேவை வழக்கும் நிறுவத்தில் இருந்து அழைக்கப்பட்டவர் வீடுவரை பழைய முறைமை பாவிக்கப்படும். அதேவேளை இந்த இரண்டு நிறுவனம்களுக்கும் இடையில் VoIP தொழில்நுட்பம் பாவிக்கப்படும்.

அதுசரி இவற்றில் எது சிறந்தது? இருமுறைமைகளும் நன்மையையும் தீமையையும் கொண்டுள்ளன.

பழைய முறையில் பிரத்தியேக இணைப்பு (dedicated line) பாவிக்கப்படுவதால் ஒலி மிக தெளிவானது ஆனால் சேவைக்கட்டணம் மிக அதிகம். புதிய முறையில் ஒலி பாதிப்படைய பல காரணிகள் உண்டு ஆனால் சேவைக்கட்டணம் மிக குறைவு. போதிய bandwidth இன்மையும் ஒரு காரணமாகலாம். இதனால்தான் சில phone-card களின் ஒலி தெளிவாகவும் சில தெளிவற்றும் காணப்படும்.

இரண்டாவது விடயம் தொலைபேசிக்கான மின் இணைப்பு. பழைய தொலைபேசிகள் தமக்கு வேண்டிய மின்னை தொலைபேசி நிறுவனத்திடம் இருந்தே பெற்றுக்கொள்ளும். உங்கள் வீட்டில் மின் துண்டிக்கப்பட்டாலும் உங்கள் தொலைபேசி இயங்கும். ஆனால் புதிய தொலைபேசிக்கு உங்கள் வீட்டு மின்னே பயன்படுத்தப்படும். அதனால் உங்கள் வீட்டில் மின் இல்லையென்றால் நீங்கள் உங்கள் தொலைபேசியை பாவிக்க இயலாது. சிறு வர்த்தகர்கள் இதை குறிப்பாக கவனிக்க வேண்டும். சிறு வர்த்தகர்கள் ஓரிரு பழைய முறை இணைப்புக்களையும் வைத்திருப்பது பாதுகாப்பு.

மூன்றாவது மறைந்திருக்கும் ஓர் செலவு. பழைய முறையில் இருந்திருக்காத ஒரு செலவு புதிய முறையில் மறைந்துள்ளது. புதிய முறை தொலைபேசியில் நீங்கள் கதைக்கும்போது நீங்கள் மாதாந்தம் ஒதுக்கப்பட்ட உங்கள் Internet இன் சேவையை பயன்படுத்துகிறீர்கள் (64 kbps ஒவ்வொரு திசையிலும் மொத்தம் 128 kbps ).

நாலாவதாக புதிய சேவையின் மிகப்பெரிய நன்மை இவ்வகை தொலைபேசியை நீங்கள் உலகெங்கும் எடுத்துச்செல்லலாம். அவ்வாறு செல்லும்போது உங்கள் தொலைபேசி இலக்கமும் உங்களுடன் இலவசமாக வரும் (சில நிறுவனம்கள் இதை திருட்டுகள் காரணமாக தடுப்பார்). இதை பழைய தொலைபேசியில் செய்ய முடியாது. சிறு வர்த்தகர்கள் அவர்களின் அலுவலகத்தில் ஒரு தொலைபேசியையும் வீட்டில் அலுவலக இலக்கத்தையே பயன்படுத்தி இன்னுமோர் தொலைபேசியையும் வைத்து 24 மணிநேர சேவையும் செய்யலாம்.

ஐந்தாவதாக அவசரகால அழைப்பை கவனிக்கலாம். பழைய முறை தொலைபேசியை பயன்படுத்தி நீங்கள் அவசரகால அழைப்பை மேற்கொண்டால் அவசரகால சேவை வழங்குவோருக்கு உங்கள் முகவரி உடன் திடமாக தெரியும். ஆனால் புதிய முறையில் உங்கள் முகவரியை நீங்களே கொடுக்கவேண்டிவரலாம். இதற்கான சேவை நிறுவனம்கள் ஆரம்பிக்கப்பட்டாலும் உங்களின் கவனம் இங்கு முக்கியம்.

ஆறாவதாக, புதிய முறையில் நீங்கள் நினைத்தவுடன் புதியதோர் தொலைபேசியை வாங்கி இணைக்க முடியாது. அவ்வாறு புதிய தொலைபேசியை இணைக்க முன் அவற்றை உங்கள் சேவை நிறுவனத்திடம் பதிவு செய்யவேண்டும். ஆனால் பழைய முறையில் நீங்கள் நினைத்தபடி தொலைபேசிகளை வாங்கி பூட்டலாம்.

இவ்வாறு இரு பாவனைகளிலும் பல நன்மைகளும் தீமைகளும் உண்டு.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS