Socialize

பாலாவின் பரதேசி

ஜோர்ஜ்

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் படங்களைத் தந்த பாலா இப்போது பரதேசி படத்தை வெளியிடவிருக்கிறார்.1930களில் இந்தியாவின் சுதந்திரத்திற்கு முந்திய சூழலில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து பரதேசி இயக்கப்பட்டிருக்கிறது.

ஆதர்வா முரளி, வேதிகா, தன்சிகா ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். சிவகங்கையில் உள்ள மானாமதுரையிலும் தேனியில் உள்ள கண்ணாகரையிலும் கேரளாவிலும் இந்தப் படத்திற்கான படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளன.

90 நாட்களில் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக செழியன் உள்ளார். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் பாடல் வெளியீடும் முன்னோடி வெளியீடும் செப்டம்பரில் லண்டனில் வெளியிடப்படும்.
தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்தப் படம் அக்டோபரில் வெளியாகும்.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS