Socialize

பிரபல பாடகரான ஸ்ரீவி வொண்டர் தனது இரண்டாவது மனைவியை விவாகரத்துச் செய்கிறார்.

பிரபல பாடகரான ஸ்டீவி வொண்டர் தனது இரண்டாவது மனைவியை விவாகரத்துச் செய்கிறார். விழிப்புலன் இழந்த பாடகரான வொண்டர் Part time lover, I just called to say I love you, Isn’t she lovely போன்ற ஹிட் பாடல்களைப் பாடியவர். இன்னொரு பாடகரான தன் முதல் மனைவியை 1972ல் விவாகரத்துச் செய்த வொண்டர், 2001இல் ஆடை வடிவமைப்பாளர் ஒருவரைத் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு 7,10 வயதில் இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
62 வயதான ஸ்டீவி வொண்டருக்கு இந்த இரண்டு மனைவியர் மட்டுமன்றி, வேறு தொடர்புகளாலும் மொத்தம் 7 பிள்ளைகள் உள்ளனர்.
தன் மனைவியுடன் சமரசம் செய்ய முடியாத வேறுபாடுகள் தோன்றியிருப்பதாக இவர் தனது விவாகரத்து மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு கலிபோர்ணியாவில் தாக்கல் செய்திருப்பதால், இந்த வேறுபாட்டுக் குற்றச்சாட்டுடன் இலகுவாக விவாகரத்துச் செய்ய முடியும்.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS