Socialize

பெரியாரைப் படித்தல்.

குவார்னிகா

தந்தை பெரியார் என்ற கௌரவத்தோடு நாம் அழைக்கும் ஈ.வே.ராமசாமி அவர்கள். நாத்திகராக கடுமையான கடவுள் மறுப்பாளராக மட்டுமே பலரால் அறியப்பட்டவர். தமிழகத்தில் இன்று அரசியல் பேசுகின்ற அத்தனை திராவிடக் கட்சிகளுக்கும் தாய்க் கட்சி அவருடைய திராவிடக்கட்சி. தி.மு.க. என்றாலும் அ.தி.மு.க. என்றாலும் ம.தி.மு.க. என்றாலும் எல்லாமே பெரியாரின் திராவிடக் கட்சி தான் ஆரம்பம். ஆனாலும் தான் இறக்கும் வரை பாராளுமன்ற அரசியலில் நுழையாத நேர்மையாளர்.

இந்தியப் பார்ப்பனியர்களின் இந்தியத் தேசியத்திற்கு எதிராகத் திராவிடம் பேசிய பெரியார், ஹிந்தித் திணிப்பிற்கு எதிராக போராடியவர். அவரே இன்னொரு கட்டத்தில் தமிழைக் காட்டுமிராண்டிகளின் மொழி எனக் கோபப் பட்டவர். தமிழ் சர்வதேச மொழிகளுடன் போட்டி போடவேண்டும். தமிழ் அழிய விடாமல் பாதுகாக்கப்படவேண்டும் என்றால் தமிழ் செதுக்கப்படவேண்டும் எனச் சொல்லி 247 எழுத்துக்களிலிருந்து கணிசமானவை அகற்றப்படவேண்டும் எனச் சொல்லி முடிந்தவரை சிர் திருத்தியவுர் பெரியார். அவர் திருத்திய தமிழ் எழுத்துக்களில் அனேகமானவைதான் நாம் தற்போது கம்பியூட்டரிலும் எழுத்திலும் பாவித்து வருவது. னை. லை ளை. என்பவைகளை கம்பியூட்டர் அற்ற காலங்களிலே பெரியார் எழுதிவைத்தார்.

பகுத்தறிவின் தந்தை என்ற பெரியார் அவர்கள் தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்களை மேற்கொண்டார். அதாவது ணு,று,னு, என்னும் எழுத்துக்களை நெடிலாக மாற்ற துணைக் கால்களைப் புகுத்தினார். “ண+ =ண, ற+ற , ன+ =ன , என மாற்றி எளிதாக்கினார். மேலும் மேல் விலங்குகள் பூட்டப்பட்ட லை,ளை,ணை,னை, போன்ற நான்கு எழுத்துக்களிலிருந்த மேல் விலங்குகளைப் போக்கி அதற்குப் பதிலாக லை, ளை, ணை, னை, ஐகார ஒலி ஒலிக்கும் படி “னை, ஐகார குறியை இணைத்து கொம்பிட்ட பழையதை விடுத்து=னை எனப் புதுமையைப் புகுத்தி மொழி பயில எளிய முறையைக் கையாண்டார்.
இத்தோடு நிற்காமல் மேலும் சில குறைகளைக் கண்ணுற்று நீக்க முனைந்தார். மேலும் தந்தை பெரியார். “அய்” “அவ்” என்ற “ஐ” ,”ஔ” இரண்டையும் நீக்கும் சிந்தனையில் மூழ்கினார். வடமொழிகளை நீக்கி ஜனநாயகத்தை சனநாயகம் எனவும்

ஔவையாரை அவ்வையார் எனவும் எழுதினார். தந்தை பெரியார் அவர்கள் இந்த 20-ஆம் நூற்றாண்டின் இணையற்ற சுய சிந்தனையாளர். இதற்குமப்பால் அவர் சாதியவிடுதலைக்காகவும் பெண்விடுதலைக்காகவும் பேசிய விடையங்கள் மிகக் கவனிக்கத்தக்கவை. நமது அடுத்த தலைமுறை கூர்ந்து கவனிக்கவேண்டிய மிகப்பெரிய அறிவாளி அவர்.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS