Socialize

மகாராணியார் சொன்னதை ஒலிபரப்பியதற்காக மன்னிப்பு கோரியது BBC

மித்திரன்

24-09-2012 அன்று ஐரோப்பிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து அமெரிக்கவிற்கு நாடு கடத்தப்படவிருக்கும் முஸ்லிம் தீவிரவாத மத தலைவரான அபு ஹம்சா அல் மஸ்றி என்பவர் பிரித்தானியாவில் இருந்துகொண்டு பிரித்தானியாவிற்கு விரோதமாக செயற்பட்டு வருவது பற்றி மகாராணியார் மிகவும் அதிருப்தியடைந்திருந்தார். இது தொடர்பாக BBC யின் பாதுகாப்பு நிருபர் Frank Gardner உடன் தனிப்பட்ட ரீதியாக உரையாடி உள்ளார். BBC யின் பாதுகாப்பு நிருபர் Frank Gardner, “மகாராணியார், சர்ச்சைக்குரிய மதகுருவை கைது செய்வதற்கு எது வித வழியுமில்லை என்பது குறித்து மிகவும் ஆத்திரமடைந்திருக்கிறார். அம்மையாரினால் இதை விளங்கிக்கொள்ள முடியாதுள்ளது” என BBC யில் ஒலிபரப்பு செய்துள்ளார். அல் மஸ்றி தொடர்பாக உள்நாட்டமைச்சருடன் மகாராணியார் தொடர்புகொண்டதாக தெரிவித்துள்ள Frank Gardner, “இந்த மனிதன்(அல் மஸ்றி) இங்குள்ள சட்டங்களை மீறியுள்ளான். கடவுளே, இவன் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை?” என மகாராணியார் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

சட்டபூர்வமான அரச பரம்பரையின் தலைவர் என்ற வகையில், மகாராணியார் அரசாங்கம் எதிர்கொள்ளும் பிரச்சினையில் நடுநிலமையாக இருந்திருக்க வேண்டும். வழக்கமாக தனது அபிப்பிராயங்களை உள்வட்டத்தினுள் வைத்துக்கொள்ளும் மகாராணியார், அல் மஸ்றியின் விடயத்தில் தான் அரசாங்க அமைச்சருடன் பேசியதை வெளிப்படுத்தியதானது வழக்கத்துக்கு மாறானதொரு விஷயமாகும். மிக முக்கியமான தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயத்ததில் மகாராணியார் அளவுக்கு மிஞ்சி தலையிட்டுள்ளதாக சிலர் கருதுகிறார்கள்.

“Frank Gardner உடனான சம்பாஷனை தனிப்பட்ட ரீதியானதாக இருந்திருக்க வேண்டும். BBC யும் Frank Gardner உம் நம்பிக்கையை மீறியமைக்காக ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம்” என செய்தி வெளியிட்டு சில மணி நேரங்களில் BBC மன்னிப்பு கோரியுள்ளது.

மகாராணியாரின் மேற் குறிப்பிட்ட கருத்துக்கள் பிரித்தானியாவில் அரச பரம்பரைக்கு எதிரானவர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரச பரம்பரைக்கு எதிரான Republic என்னும் குழு, BBC யானது அரச பரம்பரையின் உத்தியோக ஊதுகுழலாக செயற்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளது. “மகாராணியார் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்றும் ஒருபோதும் தலையிடுவதில்லை என்றும் சொல்லப்பட்ட போதிலும், சர்ச்சைக்குரிய விடயத்தில் தலையிட்டதை அவர் ஒத்துக்கொண்டுள்ளார். ஒரு சம்பாஷணையை மட்டும் வெளிப்படுத்தியுள்ள அதே நேரத்தில் இன்னும் எத்தனையோ விடயங்களை மறைத்து வைத்திருப்பதானது மகாராணியாரை நியாயவாதியாக காட்டுவதற்கான ஒரு வித்தையேயாகும் என Republic இன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

BBC போன்ற மேற்கத்தைய நாட்டு ஊடகங்கள் நம்பகத்தன்மை உள்ளன போன்று வெளியிலே காட்டிக்கொண்டாலும் உண்மையிலே அவர்களது எஜமான்களின் தாளத்திற்கு ஆடுபவர்களாகவே உள்ளன.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS