Socialize

மீண்டும் கூடி வருமொரு உலக பொருளாதார நெருக்கடி

இளவழகன்

கடந்த 2008 இல் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை போல் அல்லது அதற்கும் மேலான உலக அளவிலான இன்னுமோர் பொருளாதார நெருக்கடி தோண்றுவதற்கான அறிகுறிகள் பல வெளிவந்துகொண்டிருக்கின்றன. கடந்த 2008 இல் ஏற்பட்ட நெருக்கடி முதலில் பாரிய அளவில் அமெரிக்காவையும் பின் ஐரோப்பாவையும் பாதித்தது. அப்போது சீன, இந்திய, ஆஸ்திரேலிய பொருளாதாரம்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருக்கவில்லை. ஆனால் இம்முறை நெருக்கடி உலகம் எல்லாம் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

அடுத்த பொருளாதார நெருக்கடிக்கான அறிகுறிகள் சிலவற்றை இங்கு நாம் குறிப்பிடலாம். இவைகளுடன் ஏற்கனவே எழுந்துள்ள கிரேக்க, ஸ்பானிய, போர்த்துகீய பொருளாதார நெருக்கடிகளுக்கும் உச்சம் அடையலாம்.

FedEx என்ற பொதிகள் பரிமாறும் நிறுவனம் தமது ஆவணி மாதம் முடிவடையும் காலாண்டின் பங்குலாபம் US$ 1.37 இல் இருந்து 1.43 வரை இருக்கும் என 2012:09:05 அன்று அறிவித்துள்ளது. ஆனால் இரண்டு மாதம்களுக்கு முன் கடந்த ஆணியில் மேற்கூறிய காலத்திற்கு US$ 1.45 இல் இருந்து 1.60 வரை பங்கு ஒன்றுக்கு இலாபம் கிடைக்குமென கூறியிருந்தது. சென்ற ஆடி மாதத்தில் UPS உம் இவ்வாறான எச்சரிக்கையை விடுத்திருந்தது. அப்போது UPS தனது 2012 ஆம் வருடத்திற்கான வருமானம் பங்கு ஒன்றுக்கு US$ 4.50 இல் இருந்து 4.70 வரை இருக்கும் என திருத்தம் செய்தது. முன்னர் இக்காலத்துக்கு வருமானம் 4.70 இன் இருந்து 5.00 ஆக இருக்குமென கூறி இருந்தது. பொதிகள் பரிமாறும் நிருவனம்கள் பொருளாதார நாடி பார்ப்பதற்கு மிகவும் நல்ல கருப்பதன்கள் ஆகும். கடந்த வருட ஆடி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆடியில் உலக அளவிலான வான்வழி பொதிகள் பரிமாற்றம் 3.2% ஆல் குறைந்துள்ளது.

HSBC வங்கியின் கருத்துப்படி சீன உற்பத்தி கணியம் (HSBC Manufacturing PMI – Purchasing Managers’ Index) ஆடி மாதத்தில் 49.3 இல் இருந்து ஆவணி மாதத்தில் 47.6 ஆக வீழ்ந்துள்ளது. ஐரோப்பாவின் உற்பத்தியினதும் சேவைகளினதும் ஆவணிமாத 46.3 ஆக இருக்கும் என மீள் கணிப்பு செய்யப்படுள்ளது. மற்றைய நாடுகளைவிட உறுதியாக உள்ள ஜேர்மன் நாட்டில் இந்த பெறுமானம் 47 ஆக மட்டுமே இருக்கும். சுவிஸ் இன் PMI பெறுமானமும் குறைவடைந்துள்ளது. PMI பெறுமானம் 50 இற்கு மேல் இருந்தால் அது பொருளாதார வளர்ச்சி ஆகும். அது 50 இற்கு கீழ் என்றால் பொருளாதார வீழ்ச்சி ஆகும்.

பிரான்சில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை 3 மில்லியன் ஐ தாண்டிவிட்டது. அதாவது பிரான்சில் வேலை இல்லாதோர் வீதம் 10% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 13 வருடம்களுக்கு முன் 1999 இல் இருந்த நிலைமையாகும். இன் நிலை தொடரும் என பிரெஞ்சு அரசு கருதுகிறது.

ஆஸ்திரேலிய Qantas விமான சேவை அண்மையில் முடிந்த முழு ஆண்டுக்கான நஷ்டம் A$ 244 மில்லியன் என அறிவித்து இருந்தது. அதனால் இந்த விமான சேவை ஏற்கனவே அறிவித்திருந்த தனது 35 Boeing 787 விமானம்களுக்கான கொள்வனவை இரத்து செய்தது. இது அமெரிக்க விமான உற்பத்தி நிறுவனமான Boeing இற்கு பாரிய இழப்பாகும். சர்வதேச வான் போக்குவரத்து கூட்டமைப்பின் கருத்துப்படி அனைத்து ஐரோப்பிய விமான சேவை நிருவனம்களின் இவ்வருட மொத்த நஷ்டம் US$ 1.1 பில்லியன் ஆக இருக்கும். சீனாவின் மூன்றாவது பெரிய விமான சேவை நிறுவனமான China Eastern Airlines இன் கடந்த அரை ஆண்டு இலாபம் முன்னரைவிட 65% ஆல் குறைத்திருந்தது.

அமெரிக்காவின் வேலை இல்லாதோரின் அளவு 8.2% மாகவே உள்ளது. இந்நிலை தொடரும் என அமரிக்க அரசு கணிப்பிடுகிறது. இந்த வருட ஆரம்பத்தில் அமெரிக்க பொருளாதாரம் மாதம் ஒன்றுக்கு 225,000 வேலைவாய்ப்பை உருவாக்கியிருந்தது. ஆனால் தற்போது ௭௫,௦௦௦ வரையான வேலைவாய்ப்புகளையே உருவாக்குகின்றன. அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி முன்னர் 2.4 % மாக இருக்கும் என அறிவித்திருந்தாலும் இபோது வளர்ச்சி 1.9 % மாகவே இருக்கும் என அமெரிக்க அரசு கூறுகிறது.

அமெரிக்க வீட்டு பெறுமான வீழ்ச்சியின் பின் அமெரிக்க அரசு வங்கிகள் ‘foreclosures’ செய்யும் முறைகளில் பாரிய கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி இருந்தது. அதனால் அமெரிக்காவில் ‘foreclosures’ குறைவடைந்து காணப்பட்டது. ஆனால் அந்த அரச கட்டுப்பாடு இப்போது விலக்கப்பட்டுள்ளது. அதனால் மீண்டும் ‘foreclosures’ கள் அங்கு அதிகரிக்கலாம்.

தென் கொரியாவின் சித்திரை முதல் ஆணி வரையான பொருளாதார வளர்ச்சியும் 2.3 % ஆகவே காணப்பட்டது. முன்னர் இது 2.4 % ஆக இருக்கும் என கூறப்பட்டது.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS