Socialize

மீண்டும் நிதியமைச்சராக சிதம்பரம்

ஜோர்ஜ்

அத்துடன், சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற நாடளாவிய மின்தடையின் பின்னால் மின்சக்தி விவகாரப் பொறுப்பு தற்போதைய கூட்டுத்தாபன அலுவல்கள் அமைச்சர் வீரப்ப மொய்லிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெற்ற பம்பாய் பயங்கரவாதக் குண்டுவெடிப்புகளின் பின்னால் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த சிதம்பரம் தமிழ்நாட்டில் சிவகங்கைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆவர். தற்போது சர்வதேச நிதி நிலைமைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் புதிய நிதியமைச்சரான சிதம்பரத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலித் இனத்தவரான ஷின்டே ராஜீவ் காந்தி குடும்பத்தின் விசுவாசி ஆவர். அவருக்கு உள்துறை அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது. அவரது பதவி உயர்வு தேர்தலில் தலித் வாக்குகளைப் பெற உதவும் என்று கூறப்படுகிறது.

இந்த மாற்றங்களில் ராகுல் காந்திக்கும் மந்திரிப் பதவி வழங்கப்படலாம் என்று ஊகங்கள் தெரிவிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் அவ்வாறான பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை. இருப்பினும் சமீபத்தில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் விரைவில் ராகுல் காந்தி பெரும் பதவியை ஏற்றுக் கொள்வார் என்று தெரிவித்திருந்தார். அனைத்திந்திய காங்கிரஸ் குழுவில் விரைவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ள நிலையில், ராகுல் காந்திக்கான முடி சூடல் விரைவில் நடந்தேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்குள் பிரணாப் முகர்ஜி நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்திருந்ததால், அவரது பதவிக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப, சோனியா காந்தி அந்தப் பதவியை ஏற்க வேண்டும் என்று திமுக விரும்புவதாகக் கூறப்படுகிறது. முன்னர் சோனியா காந்தியே எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்திருந்தார். கட்சியின் பாராளுமன்றத் தலைவராக முக்கிய அமைச்சர்களே நியமிக்கப்பட்டாலும், அது விதியல்ல என்பதே திமுக வின் வாதமாகும்.
சிலவேளைகளில் ராகுல் காந்தி அந்தப் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்று ஊகங்கள் வெளியாகியுள்ளன.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS