Socialize

முகப் புத்தகத்தில் தலை காட்டும் போலி முகங்கள்

ஜோர்ஜ்

முகப்புத்தகத்தில் உலவுவோரில் சுமார் 83 மில்லியன் வரையிலானவர்கள், மொத்தம் 8.7 வீதமான முகப்புத்தக உலவுனர்கள், வேறு பெயர்களிலேயே முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்கள்.
இதில் 4.8 வீதத்தினர் இரண்டு பெயர்களில் பதிவு செய்திருக்கிறார்கள். 2.4 வீதத்தினர் தங்கள் தொழில் நிறுவனங்கள் பெயரில் பதிவு செய்திருக்கிறார்கள். சுமார் 1.5 வீதத்தினர் முகப்புத்தக விதிமுறைகளை மீறிப் பதிவு செய்திருக்கிறார்கள்.
இணையத்தில் பதிவுகளும் பின்னூட்டங்களும் செய்யும் பலரும் புனைபெயர்களிலேயே எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இணையம் தரும் முகம் மறைத்த அனாமதேய உருவங்கள், பலரும் அவதூறுகளை எழுத வசதி செய்கிறது.
இதற்குள் பல்வேறு விதிமுறைகளுடனான முகப்புத்தகத்தையே ஏமாற்றி போலிப் பெயர்களில் ஒரு கூட்டம் உலவி வருகிறது. எனவே, உங்களோடு முகப்புத்தகத்தில் காதல் செய்பவர் சில நேரம் பொய்யான நபராக இருக்கக் கூடும். எதற்கும் ஏடாகூடமான போஸ்களில் படங்களை அனுப்புவதற்கு முன்னால் முகப்புத்தக அடையாளத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS