Socialize

முன்னாள் அமைச்சர் உட்பட 32 இந்துக்கள் குற்றவாளிகள்

இளவழகன்

முன்னாள் குஜாராத் பெண் அமைச்சர் Maya Kodani மற்றும் இந்து குழு தலைவர் Babu Bajrangi உட்பட 32 இந்துக்கள் 2002 ஆம் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த மத கலவர விசாரணையில் குற்றவாளிகள் Ahmedabad நீதிமன்று இன்று (Aug 29, 2012) தீர்ப்பளித்துள்ளது. இந்திய சட்டப்படி இவ்வகை
குற்றத்துக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்கப்படலாம்.

2002 இல் இந்தியாவில் நடந்த மத கலவரத்தின்போது முஸ்லிம்கள் அதிகம் வாழும் Narda Patiya பிரதேசத்தில் மட்டும் சுமார் 100 நபர்கள் வரை கொல்லப்பட்டிருந்தார்கள். சுமார் 60 இந்துக்கள் அயோத்தியாவில் (Ayodhya) இருந்து வந்துகொண்டிருந்த புகையிரத தீ ஒன்றில் கொல்லப்பட்டதை அடுத்து இந்தியா முழுவதும் நடத்த மத கலவரத்தில் சுமார் 2000 மக்கள் கொள்ளப்படிருந்தார்கள். கொல்லப்படவர்களில் அதிகமானோர் முஸ்லிம்களே.

அயோத்தியாவில் உள்ள mosque இந்து வாதிகளால் 1992 இல் உடைக்கப்பட்டிருந்தது தெரிந்ததே.

புகையிரதத்தில் தீயை வைத்தது சில முஸ்லிம்களே என கூறப்பட்டிருந்தாலும், 2005 ஆம் மத்திய அரசு நடாத்திய விசாரணை அத்தீ வன்முறை நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது இல்லை எனவும் சமையல் தீயே அவ்வாறு பரவியிருக்கலாம் எனவும் கூறியது.

இந்து வாதியான நரேந்திர மோடியின் அரசு மூன்று நாட்கள் நடந்த இந்த மத கலவரத்தை கண்டும் காணாமல் இருந்ததாக மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன. நரேந்திர மோடி ஒரு முன்னணி BJB உறுப்பினர் ஆவர். ௨௦௦௮ ஆம் ஆண்டு குஜராத் மாநில அரசு நடாத்திய விசாரணையில் நரேந்திர மோடி குற்றவாளி இல்லை என கூறப்பட்டது.

கடந்த வருடம் கார்த்திகையில் மேலும் 31 நபர்கள் குஜராத் கலவர குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டிருந்தனர். இவர்களுக்கு ஆயுள் தண்டனையே வழங்கப்பட்டது.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS