Socialize

மும்முனையில் தோல்வியுறும் அமெரிக்க இராணுவம்

இளவழகன்

அடுத்த மாதம் அமெரிக்க மற்றும் NATO தலைமையிலான ஆப்கானிஸ்தான் யுத்தம் ஆரம்பித்து 11 வருடங்கள் ஆகின்றன. ஆனால் 11 வருடத்தின் பின்னும் பணம், பொருள், வல்லமை படைத்த வல்லரசுகளால் நடாத்தப்படும் இந்த யுத்த உக்கிரம் ஓயவில்லை. இந்த போர் களத்தில் அமெரிக்க மற்றும் NATO கூட்டு குறைந்தது மூன்று முனைகளில் தொடர்ச்சியான தோல்விகளை தழுவுகின்றது.
அவை 1 ) ஆப்கான் போலீஸ் மற்றும் படைகளுள் நுழைந்து, பயிற்சி பெற்று நண்பர்கள் போல் பக்கத்தில் தோளோடு தோள்நின்று போரிடும் எதிரிகள்,
2) தமது வீரர்களை பலியாக்காது போரிட விமானங்கள் மற்றும் வேவு விமானங்களிருந்து போடப்படும் குண்டுகள் அப்பாவி மக்களை கொல்லுதல்,
3) கூட்டுப்படையின் பலவீனம் அறிந்து போரிடும் எதிரிகள்.

சென்ற ஞாயிறு அன்று மட்டும் ஒரேநாளில் இந்த மூன்றுவகை இழப்புகளும் இடம்பெற்றுள்ளன.

கடந்த ஞாயிறு (2012:09:16) அன்று 4 அமெரிக்க இராணுவத்தினர் ‘ஊடுருவிய’ தலபான்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர், 8 ஆப்கான் பெண்கள் NATO விமான தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர், அத்துடன் US$ 200 மில்லியன் பெறுமதியான NATOவிற்கு சொந்தமான யுத்த விமானங்களும் இராணுவ தளபாடங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இந்த 11 வருட யுத்தத்தில் NATOவின் இன்றைய இழப்பு இவ்வகையில் மற்ற எந்த நாட்களிலேயும் நடந்ததில்லை.

ஆப்கான் போலீஸ் மற்றும் இராணுவத்துள் ஊடுருவிய தலபான்கள் அமெரிக்க NATO கூட்டு படைகளுக்கு மிகவும் பெரிய அச்சுறுத்தலாய் உள்ளனர். கடந்த ஞாயிறு ஆப்கானின் தெற்கு மாநிலமான Zabulலில் அமரிக்க இராணுவத்துடன் காவலில் இருந்த 6 ஆப்கான் தேசிய போலீஸ் சிலர் 4 அமெரிக்க இராணுவத்தினரை சுட்டு கொன்றுள்ளனர். அப்போது ஒரு ஆப்கான் தேசிய போலீஸ்சும் இறந்துள்ளது. ஏனைய ஐவர் தப்பியோடியுள்ளனர். இதற்கு ஒரு தினம் முன் கடந்த சனியன்று 2 பிரித்தானிய இராணுவத்தினரும் இவ்வாறு ஊடுருவிய போலீஸால் Helmand மாநிலத்தில் கொலை செய்யப்பட்டிருந்தனர். அமெரிக்க அரசுக்கோ ஆப்கான் அரசுக்கோ எவ்வளவு தலபான்கள் இவ்வாறு ஊடுருவியுள்ளனர் என தெரியாது. இந்த விடையத்தை வெற்றிகொள்வது சுலபமாகதாகவும் தெரியவில்லை.

அடுத்ததாக விமானங்கள் மற்றும் வேவு விமானம்களில் இருந்து வீசப்படும் குண்டுகள் அப்பாவி மக்களை கொல்லுதல். கடந்த ஞாயிறு அன்று இறந்த எட்டு பெண்களும் விறகு எடுக்க காட்டுக்குள் சென்றவர்களே. எவ்வளவுதான் தொழில்நுட்பம் இருந்தாலும் ஆகாயத்தில் இருந்து மிக திருத்தமாக எதிரியை அடையாளம் காண முடியாது. அதற்கு தரையில் இராணுவத்தை அனுப்ப வேண்டும். ஆனால் அவ்வாறு அனுப்பும்போது ஏற்படும் உயிர் இழப்புகளுக்கு முகம் கொடுக்க அமெரிக்க தயாரில்லை. இவ்வாறு அமெரிக்க மற்றும் அமெரிக்க சார்பு படைகளின் குண்டுகளுக்கு ஆப்கான் பொதுமக்கள் மட்டுமல்லாது பாகிஸ்தான் பொதுமக்களும் பலியாகிவருகின்றனர். இது எதிரி தரப்பில் உள்ள பொதுமக்களை தம்வசம் கவர பெருதும் தடையாக இருக்கிறது. அமெரிக்க கூட்டு தரப்புக்கு இந்த விடையத்தை வெற்றிகொள்வதும் சுலபமாக தெரியவில்லை.

அடுத்ததாக அமெரிக்க தரப்பின் பவீனம் கண்டு தாக்கும் எதிரியின் திறன். கடந்த ஞாயிறு சுமார் 15 தலபான் உறுப்பினர்கள் நான்கு மணித்தியாலம்கள் Camp Bastion என்ற பிரித்தானிய இராணுவத்திற்கான முகாம் மீது நடாத்திய தாக்குதலில் US$ 200 மில்லியன் வரையிலான இழப்புகள் ஏற்பட்டுள்ளன. மிகவும் பாதுகாப்பாக அமைக்கப்பட்ட இந்த முகாமை தாக்கியவர்கள் 6 AV-8B Harrier யுத்த விமானங்களையும் மற்றும் 3 எரிபொருள் நிரப்பு நிலையம், 6 விமான கூடாரம் ஆகியவற்றையும் அழித்துள்ளனர். இவை தலா $ 30 மில்லியன் பெறுமதியானவை. தாக்க வந்தவர்கள் அமெரிக்க இராணுவ உடை அணிந்து வந்துள்ளனர். NATOவின் கருத்துப்படி தாக்கியவர்கள் நன்கு பயிற்சி அளிக்கப்பட்டு, நன்கு ஒத்திகை பார்த்து, நன்கு ஆயுதம் தரித்து வந்திருந்தனர். அவர்களில் 14 தலபான்கள் கொல்லப்படுள்ளனர்.

Harrier யுத்த விமானங்கள் நிலைக்குத்தாக மேலேளும்பவும் தரையிறங்கவும் கூடியன. இவற்றுக்கு நீண்ட ஓடுபாதை தேவையில்லை.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS