Socialize

மோசமான காலநிலையினால் ஆறுபேர் உயிரிழப்பு. பெருந்தொகையானோர் பாதிப்பு.

இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் மோசமான காலநிலையால் இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 19 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 70 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 3000 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 16 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 6,200 பேர்வரையில் அகதிகளாகியுள்ளதகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் கிழக்கே கடற்பகுதியில் மையங்கொண்டிருந்த தாழமுக்க மையத்தினால் நாட்டின் பல பகுதிகளிலும் கடுங்காற்று, கடுமையான மழை, வெள்ளப் பெருக்கு, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏறபட்டு பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது. இத் தாழமுக்கதினால் “நீலம்’ சூறாவழி தோன்றிய போதும் அது கடுமையானதாக மாறவில்லை.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இங்கு, 7 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 543 குடும்பங்களைச் சேர்ந்த 1841 பேர் 10 தற்காலிக முகாம்களில் தங்கியருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்.மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 4700 குடும்பங்களைச் சேர்ந்த 17800 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 11 தற்காலிக முகாம்களில் 470 குடும்பங்களைச் சேர்ந்த 177 பேர் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 1200 குடும்பங்களைச் சேர்ந்த 4400 பேர் பாதிக்கப்பட்டுள்ளதகவும் ஒரு தற்காலிக முகாம் அமைக்கப்பட்டு 16 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேர் தங்கவைக்கப்பட்டுள்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வன்னிப் பிரதேசத்தில் மீள்குடியேறி இன்னமும் தற்காலிக கூடாரங்களில் வாழ்ந்து வரும் மக்கள் இந்த மோசமான காலநிலையினால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
திருகோணமலை மாவட்டத்தில் 1300 குடும்பங்களைச் சேர்ந்த 5500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 114 வீடுகள் சேதமடைந்தாதகவும் தெரிவிக்கப்படுகிறது. மூதூர் பிரதேசத்தில் தற்காலிக நலன்புரி நிலையங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கழிவறைகள் நிறைந்து சகாதாரச் சீர்கேடான நிலைமை தோன்றியிருப்பதாகவும், மக்கள் தொழிலற்றுத் தவிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் காற்றுடன் கூடிய கடும் மழையினால் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. கடல் கொந்தளிப்பினால் மீன்பிடி முற்றாகத் தடைப்பட்டுள்ளது.
மலையகப் பகுதிகளில் கடுமையான மழையும் மண்சரிவும் பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது. மேசாமான காலநிலை தொடர்ந்து நிலவியதை அடுத்து நுவரெலியா மாவட்டத்தில் அனைத்துப் பாடசாலைகளும் இன்று வெள்ளிக்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டன. நுவரெலியாவில் கடுமையான பனிமூட்டம் நிலவிவருவதனால் போக்குவரத்து செய்வதில் சிரமமான நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பலபகுதிகளிலம் கடம் காற்று, கடும் மழை, வெள்ளப் பெருக்கு, மண்சரிவு போன்றவற்றினால் பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மின்சாரம் பல பகுதிளில் துண்டிக்கபட்டு விபத்துக்களும் எற்பட்டன. போக்கு வரத்து சேவைகளும் பாதிப்படைந்தன. அநேகமான குளங்களில் நீர்மட்டம் அதிகரித்ததையடுத்து வான் கதவுகள் திறந்து விடப்பட்டுமுள்ளன.
இன்று காநிலை சற்று சீரடைந்துள்ள போதிலும் சீரற்ற காலநிலை சில நாட்களுக்குத் தொடரும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்திருக்கிறது.
இதற்கு முன்னர் கடந்த நாலைந்து மாதங்களாக கடுமையான வரட்சியினால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வரட்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகள் தற்போதும் வழங்கப்பட்டு வரும் நிலையில், மோசமான காலநிலையும் மக்களைத் தாக்கியிருக்கிறது. அரசாங்கம் நிவாதரணம் வழங்குதவற்கப் போதுமான நிதி கையிலிருப்பில் இருப்பதாகவும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறது. ஆயினும் பாதிக்கப்பட்ட பல பிரதேசங்களிலிருந்து நிவாரத்திற்கான கோரிக்கைகளும் விடுக்கப்பட்ட வண்ணமுள்ளன.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS