Socialize

யாருக்கு சொல்லியழ 2

இளவழகன்

ஆண்டு 2011 இல் அமெரிக்கா US$ 66.3 பில்லியன் பெறுமதியான ஆயுதம்களை உலகிற்கு விற்பனை செய்துள்ளது. இந்த விற்பனை 2010 ஆம் ஆண்டு விற்பனையை விட 3 மடங்கு அதிகம். அதேவேளை 2011 இன் உலக மொத்த ஆயுத விற்பனை US$ 85.3 பில்லியன் மட்டுமே. அதாவது 2011 இல் ஏறக்குறைய 80% உலக ஆயுத விற்பனையை அமெரிக்காவே செய்துள்ளது. இந்தக்காலத்தில் உலகத்தின் இரண்டாவது பெரிய உலக ஆயுத விற்பனையாளரான ரஷ்யாவின் விற்பனையின் பங்கு 6% மட்டுமே. சீனாவின் பங்கு வெறும் 3% மட்டுமே. இது இப்படி இருக்க அமெரிக்க அரசியல் பிரச்சாரிகள், மற்றைய நாடுகள் ஆயுதம்களை விற்று உலக அமைதியை அழிப்பதாக குற்றம் சாட்டியும் வருகின்றது.

அது மட்டுமன்றி அமெரிக்க ஆயுத விற்பனையின் சுமார் அரைப்பங்கு மதிய கிழக்கு நாடுகளுக்கே விற்பனை செய்யப்பட்டது. செய்வன இவ்வாறிருக்க மத்திய கிழக்கில் நடைபெறும் சண்டைகள் பற்றி பின்னர் அழுவான் ஏன்? பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் கதையல்லவோ இது?

அமெரிக்காவின் மத்திய கிழக்கிற்கான ஆயுத விற்பனையிலும் மிக அதிகம் சென்றது அமெரிக்காவின் ஜனநாயக விஸ்தரிப்பு நண்பன் சவுதி அரேபியாவுக்கே. மத்திய கிழக்கின் ருநீசிய (Tunisia), எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் ஏறக்குறைய ஜனநாயகம் தோன்றியிருந்தாலும், அமெரிக்கா தூங்கிய பொழுதே ருநிசியாவிலும் எகிப்திலும் ஜனநாயகம் தோன்றியது. விழித்தெழுந்த அமெரிக்க முபாரக் போன்ற தன் முன்னைய நண்பர்களை கைவிட்டுவிடு வென்றவர்களுடன் வேறுவழியின்றி ஒட்டியது. அப்பகுதியில் உள்ள ஏனைய நாடுகளில் எல்லாம் ஜனாநாயகம் தோன்றினாலும் அமெரிக்காவின் ஜனநாயக நண்பன் சவுதி போன்ற நாடுகளிலேயே இறுதிவரை ஜனநாயகம் தோன்றாமல் இருக்கும்.

இவ்வாறு அமெரிக்காவின் உலகிற்கான ஆயுத விற்பனையை 300% ஆல் அதிகரித்தது வேருயாரும்மல்ல, உலகுக்கே சமாதானம் செய்ய வந்தவராக கூறப்பட்ட சமாதன புத்திரன் ஒபாமாவே. மகாத்மா காந்திக்கே கொடுக்க மறுக்கப்பட்ட சமாதானத்துக்கான நோபெல் பரிசு ஒபாமாவுக்கு 2009 இல் வழங்கப்பட்டிருந்தது. அப்படி இவர் எங்குதான் சமாதானத்தை உருவாக்கினார் என்பதுதான் தெரியவில்லை? சமாதனத்தை விரும்பின் இவர் ஏன் இப்போ சீனாவை சுற்றியும் அமெரிக்க இராணுவத்தை குவிக்கவேனும்? இதையெல்லாம் யாருக்கு சொல்லியழ?

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS