Socialize

யாருக்கு சொல்லியழ? – 3

 

இளவழகன்

கனடாவில் மாதாந்தம் வெளிவரும் ‘தமிழர் தகவல்’ தனது ஆவணி மாத இதழில் பிரசுரித்துள்ள ஆசிரியர் தலையங்கத்தை ‘தாயக பயணம்கள்’ என்று தலைப்பிட்டு அதில் வெளிநாட்டு தமிழர் இலங்கை சென்றுவருவது பற்றி விசனம் கொண்டுள்ளது. அந்த ஆசிரிய தலையங்கம் “வடக்கில் வசந்தம் வீசுவதாகக் கருதி அங்கு ‘கலர்’ காட்டப் பயணம் மேற்கொள்ளும் புலம்பெயர் உறவுகள், ‘அலுகோசுகள்’ ஆட்சியில் உயிருக்கு உத்தரவாதமில்லை என்பதை உணர வேண்டும்” என்று முடிக்கிறது. அது பக்கம் 2 இல். அது சரி பக்கம் 18 இல் என்ன?

பக்கம் 18 இல் உள்ள தலைப்பு “தமிழீழம் குரும்பசிட்டியில் நடைபெற்ற ஜேர்மன் ‘வெற்றிமணி’ ஆசிரியரின் மணி விழா” என்று தொடர்கிறது. அந்த கட்டுரை “…தமிழீழம் குரும்பசிட்டியில் கடந்த மாதம் 3ஆம் சிறப்பாக நிகழ்ந்தேறியது” என்றும் குறிப்பிடுள்ளது.

ஐயா ஆசிரியரே எங்களுக்கு ஞாபக மறதி அதிகம் என்று எங்கள் தமிழ் தலைவர், தமிழ் பத்திரிகையாளர் எல்லோர்க்கும் நன்கு தெரியும் தான். ஆனால் 2ஆம் பக்கத்தில் இருந்து 18ஆம் பக்கம் போவதற்குள்ளேயா? ஜேர்மன் நாட்டிலிருந்து சென்ற இந்த ‘வெற்றிமணி’ குரும்பசிட்டியில் காட்டியது கலரா? அங்கு மட்டும் ஏன் வெள்ளை வானில் அலுகோசுகள் வராமல் எல்லாம் சிறப்பாக நிகழ்ந்தேறியது?

தப்பியோடிய நக்கிற நாய்கள் (நன்றி காட்டவைக்கவி) பலவிதம். சில மொத்த குடும்பமாக ஆச்சி அப்புவுடன் வெளிநாடு சென்றுள்ளது. அவர்களுக்கு அங்கு செல்ல உறவுகள் எதுவும் இல்லை. மற்றும் சிலருக்கு இலங்கை போக விருப்பம் ஆனால் நீங்கள் கூறியபடி அவர்களின் பழைய படம்களால் கொண்டது பயம். ஆனால் எங்களில் சிலருக்கு பாதிக்குடும்பம் அங்கே. அதனால் நாம் போவோம் அது கலராய் இருந்தாலென்ன கரு இருளாய் இருந்தாலென்ன.

இலங்கையில் 2009 இற்கு முன்னரும்கூட உயிருக்கு உத்தரவாதம் இருந்திருக்கவில்லைத்தானே. முன்னர் யாழ்ப்பாண பத்திரிகையொன்று ஒரு கார்டூன் வரைந்து இருந்தது. அதில் ஒரு மேசை. அதன் பின் அமர்ந்திருப்பவர் பிரபாகரன். மேசையின் கீழே ஒரு மாணவர் மறைத்து வைக்கப்படிருந்தார். அது விஜிதரன். மேசையின் பின் அமர்ந்திருந்த பிரபாகரன் சொன்னார் “எங்களிடம் விஜிதரன் இல்லை” என்று. இதையெல்லாம் யாருக்கு சொல்லியழ?

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS