Socialize

யாழ்ப்பாணத்தில் திரையிடப்படுகிறது சிங்களப்படம்

ஜோர்ஜ்

முப்பது வருடங்களுக்கு பின்னால் சிங்களத் திரைப்படம் ஒன்று முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் திரையிடப்படுகிறது. வருகின்ற வெள்ளி 29ம் திகதி சிகினய திகே என்ன என்ற இந்தத் திரைப்படம் ராஜா திரையரங்கில் திரையிடப்படும்.

யாழ் வாசிகளுக்குக் கதை புரியக் கூடியதாக தமிழில் உபதலைப்புகள் இந்தப் படத்தில் இடம் பெறும்.

இயக்குனர் சந்திரரத்தின மப்பட்டிகமவின் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் சனத் குணதிலக, வீணா ஜெயக்கொடி, உதாரி வர்ணகுலசூரிய உட்பட பலர் நடித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இந்தத் திரைப்படம் திரையிடப்படுவதை புலன் பெயர்ந்த தமிழர்கள் வரவேற்பார்களா என்பது குறித்து இன்னமும் தெரியவில்லை. புலன் பெயர்ந்த ஊடகங்கள் இதுவரைக்கும் யாழ்ப்பாணத்தில் சிங்கள மொழி ஆக்கிரமிப்பது பற்றி இன்னமும் ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடத் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கனடாவில் உள்ள படைப்பாளிகள் இது குறித்து கண்டன அறிக்கை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனடாவில் இந்தப் படம் திரையிடப்பட்டால் கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று தமிழ் உணர்வாளர் ஒருவர் உணர்வு கொப்பளிக்க பூபாளத்திற்கு கருத்து தெரிவித்தார்.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS