Socialize

ராதிகா சிற்சபைஈசனின் ஆசனத்திற்கு ஆபத்தா?

ஒன்ராறியோவில் புதிய 15 தொகுதிகள் வாயூறும் தமிழ்ப் பிரமுகர்கள்

மகேஸ்

கனடிய நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதைய 308இலிருந்து 2015 தேர்தலில் 338ஆக அதிகரிக்க இருக்கிறது. அதிகரிக்கும் 30 தொகுதிகளில் ஒன்ராறியோ மாகாணம் 15 ஐயும் அல்பேட்டா 6 ஐயும் பிரிட்டிஷ் கொலம்பியா 6 ஐயும் கியுபெக் 3 ஐயும் பெற்றுக் கொள்கின்றன. புதிய சனத்தொகையினதும் அரசியமைப்பிலுள்ள ஒரு சமன்பாட்டின் அடிப்படையிலும் மாகாணங்களுக்கு பின்வருமாறு தொகுதிகள் ஒதுக்கப்படும்.
பிரிட்டிஷ் கொலம்பியா 42
அல்பேட்டா 34
சஸ்கச்சுவன் 14
மனிற்ரோபா 14
ஒன்ராறியோ 121
கியுபெக் 78
நியூ பிறன்ஸ்விக் 10
நோவா ஸ்கோசியா 11
பிறின்ஸ் எட்வேட் தீவு 4
நியூபவுண்லாண்ட் 7
ய10கோன் 1
நோத்வெஸ்ட் பிரதேசம் 1
நுனவுட் 1
புதிய தொகுதிகளின் வருகையுடன் பெரும்பாலான தொகுதிகளின் எல்லைகள் மீள நிர்ணயம் செய்யப்படவிருக்கின்றன. இதற்காக 10 மாகாணங்களுக்கும் தனித்தனி கமிசன்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
புதிய தொகுதிகளிற் பெரும்பாலானவை புறநகர்ப் பகுதிகளில் அமையவிருப்பதால் இது கொன்சர்வேற்றிக் கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. புறநகர்ப் பகுதிகளில் புதிய குடிவரவாளர் வாழ்வதனால் அவர்களின் அரசியல் முக்கியத்துவம் அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
ஒன்ராறியோ மாகாணத்திற்கான கமிசன் 121 தொகுதிகளிற்கான எல்லைகளை முன் மொழிந்திருக்கின்றது.
புதிய எல்லைகளைப் பார்க்க www.federal-redistribution.ca .
ஒன்ராறியோற்கான புதிய 15 தொகுதிகள் பிராம்ரன் (2)கேம்பிறிஜ், டர்கம் (2), கமில்ரன், மார்க்கம் (2), மிசிசகுவா, ஓக்வில், ஒட்டவா, சிம்கோ, ரொறன்ரோ (2), யோர்க் ஆகிய இடங்களில் அமையவிருக்கின்றன.
புதிய எல்லைகள் மாத்திரமல்ல பல தொகுதிகளின் பெயர்களும் மாற இருக்கின்றன.

ராதிகா சிற்சபேசனின் ஸ்காபரோ றூஜ் றிவர் ஸ்காபரோ வடக்கு தொகுதியிலும் ஸ்காபரோ கிழக்கு தொகுதியிலும் சேருகின்றது. புதிய எல்லைகள் ராதிகாவுக்கு சாதகமா என்பது விவாதத்திற்குரிய விடயம்.
இது இவ்வாறிருக்க இவ்வளவு காலம் எம்பிமாருக்குப் பின்னாலை போய் என்னத்தைக் கண்டம்ää நாங்களும் தேர்தலிலை கேட்டால் என்ன என்று பல தமிழ் பிரமுகர்கள் வாயூறத் தொடங்கியிருக்கிறார்கள்.
லிபரல் டைனசோரின் வீழ்ச்சி! புதிய எல்லைகள்! புதிய தொகுதிகள்!
வாராது வந்த மாமணியை விடுவோமா!
மாப்புளிக்கிறது அப்பத்திற்கு நல்லதுதானே!

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS