Socialize

வாருங்கள் கண்டு களிப்போம் கிரிக்கெட் திருவிழா

சிவா ஈஸ்வரமூர்த்தி


கிரிக்கெட் என்று எம் எல்லோராலும் போற்றப்படும் நுணுக்கங்கள் நிறைந்த விளையாட்டு ஆகும். இந்திய உப கண்டத்தில் பட்டி, தொட்டியெல்லாம் விளையாடப்படும் விளையாட்டு. இந்திய பாகிஸ்தான் இடையே நடைபெறும் போட்டி இவ்விரு நாடுகளுக்கிடையே யுத்தம் ஒன்று நடைபெறுவது போன்ற உணர்வலைகளை அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்துகின்றது என்றால் மிகையில்லை.
கிரிக்கட் விளையாட்டை நம் ஊரில் எல்லை என்று நாம் பட்டி தொட்டியெல்லாம் விளையாடும் ஒரு வகை பந்தை மட்டையால் அடித்து ஓட்டங்கள் பெறும் தமிழர் விளையாட்டில் இருந்து ஆரம்பிப்கப்பட்டது என்று கல்தோன்றா காலத்து போட்டியென்று நாம் கயிற விட முடியவில்லை. காரணம் இவ் வளையாட்டு 16ம் நூற்றாண்டில் இங்கிலாத்தில் முதலில் விளையாடத் தொடங்கப்பட்டது. இவ் வளையாட்டு 18ம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் தேசிய விளையாட்டாக பரிணாமம் பெற்றது. 19ம் ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சர்வதேசப் பேட்டியாக பரிணாமம் பெற்று சர்வதேசத் தரத்தில் முதல் போட்டி நடாத்தப்பட்டது. ஆரம்ப காலங்களில் இங்கிலாந்து, ஆவுஸ்திரேலிய ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான போட்டியாக பரிணாமம் அடைந்திருந்தது. உலகம் முழுவதும் தனது ஒரு குடையின் கீழ் என்ற இங்கிலாந்து சாம்ராஜ்ஜத்தில் படையெடுப்பும், அதனைத் தொடர்ந்த காலணி ஆதிக்கமும் இவ் விளையாட்டு உலகம் பூராக பரவுவதற்கு ஏதுவாக இருந்தது. ஆங்கில் மொழிப் பரம்பலும், கத்தோலிக்க மதப் பரம்பலைப் போலவே இவ்விளையாட்டும் தேயிலை பயிற் செய்கையும் பரம்பல் அடைந்து கொண்டது இங்கிலாந்துக் காண ஈதிக்க நாடுகளுக்கு. இதனால் இவ்விளையாட்டு தென் ஆபிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், சிம்பாப்பே. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் பற்றிக் கொள்வதற்கு ஏதுவாக அமைந்தது.இது அன்று இந்திய உபகண்டத்தின் திருவிழா விளையாட்டு என்ற அளவிற்கு மற்றைய எந்த விளையாட்டையும் விட பிரபல்யம் அடைந்திருக்கின்றது.

ஆரம்ப காலத்தில ஒவ்வொரு அணியிலும் 11 பெயர்களைக் கொண்ட வகையில் இரு குழுக்கள் அமைக்கப்பட்டு 5 நாள்கள் தொடர்ச்சியாக (இடையில் ஒரு நாள் விடுமுறை நாள் உட்பட ஆறு நாட்கள்) என்று முறையில் விளையாடப்பட்டு வந்தது. ஓவ்வொரு காலகட்டத்திலும் உலகத்தின் ஒவ்வொரு அணி கொடிகட்டி பறந்ததே வரலாறு. ஒரு காலத்தில் இங்கிலாந்து அணியை யாரும் வெல்ல முடியாது என்று இருந்தது. இன்னொரு காலத்தில் மேற்கு இந்திய தீவு அணியை யாரும் வெல்ல முடியாது என்ற நிலையும் நீடித்து இருந்தது. பிறிதொரு காலத்தில்தென் ஆபிரிக்க அணியை யாரும் வெல்ல முடியாது என்ற நலமைகளை அவ் அணி கொண்டிருந்தது. அண்மைக் காலங்களில் அவுஸ்திரேலியாவை யாரும் வெல்ல முடியாது என்ற நிலையும் இருந்திருக்கின்றது. ஆனாலும் இந்திய உபகண்ட அணிகள் இலங்கை இந்தியா, பாகிஸ்தான போன்ற அணிகள் இடையிடையே உலகை தம் பக்கம் திருப்பும் சர்வதேச வெற்றிகளை பெற்றும் வந்திருக்கின்றன.
கிரிக்கெட்டின் ஆரம்ப காலங்களில் 5 நாட்கள் போட்டி என்ற Test போட்டி வகைகள் மட்டும் அறிமுகப்பட்டிருந்தன. இவ்வகைப் போட்டிகளில் போட்டியின் இறுதி நாளான 5 நாளில் கூட போட்டி வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியாத வகையில் முடிவுறாத போட்டிகளினால் கிரிகட் ரசிகர்கள் மத்தியில் இப் போடடியின் மீதான ஆர்வம் குறைய ஆரம்பித்தது. இதன் தொடர்சியாக 50 ஓவர்களைக் கொண்ட மட்டுப்படுதப்பட்ட போடடி முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்போட்டிகள் ஒரு முழு நாளில் முடிவடைந்து விடும். அது மட்டும் அல்லாது நாள் முடிவில் நிச்சயமாக போட்டியின் முடிவு வெற்றி தோல்வி தெரிந்து விடும என்ற நிலமை இருக்கின்றது. எனவே இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்றது. இதற்கான முதல்தர கிரிக்கட் விளையாடும் நாடுகளின் உலகக் கிண்ணப் போட்டி 4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்றும் வருகின்றது.

1 2 3 4 5

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS