Socialize

விமான உற்பத்தி நிறுவனம்கள் EADS, BAE இணைவு?

இளவழகன்

உலகின் பெரியதோர் விமான உற்பத்தி நிறுவனமான Airbus இன் தாய் நிறுவனமான EADS (European Aeronautic, Defence & Space) நிறுவனமும் பிரித்தானியாவின் BAE Systems என்ற நிறுவனமும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன. இவ்வாறு இவை இணைத்தால், புதிதாக இணைந்த நிறுவனம் 2011 ஆம் ஆண்டு கணக்குப்படி சுமார் US$ 92 பில்லியன் வருட வருமானத்தையும் 220,000 ஊழியர்களையும் உலகளவில் கொண்டிருக்கும். அத்தோடு இதுவே உலகின் பெரிய விமான உற்பத்தி நிறுவனமுமாக இருக்கும். இணைந்த நிறுவனத்தின் 60% உரிமையை EADS நிறுவனமும் 40% உரிமையை BAE நிறுவனமும் கொண்டிருக்கும்.

அதேவேளை கடந்த வருடம் அமெரிக்க நிறுவனமான Boeing $68.7 பில்லியன் வருமானத்தையும் Lockheed Martin நிறுவனம் $ 46.5 பில்லியன் வருமானத்தையும் கொண்டிருந்தன.

இந்த இரு நிறுவனம்களும் பொதுசன விமானம்கள் மட்டுமன்றி பல நாடுகளுக்கு இராணுவ விமான, கடல்படை மற்றும் இலத்திரனியல் உபகரணம்களை வடிவமைத்து தயாரிப்பதால் அந்தந்த நாடுகளின் சம்மதம்களையும் இவர்கள் பெறவேண்டி இருக்கும். BAE பாரிய அளவில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற மேற்கு நாடுகளுக்கு நீர்மூழ்கிகள் மற்றும் யுத்த விமானம்கள் தயாரிக்கும் நிறுவனமாகும்.

இவ்வாறான இணைவு அமெரிக்க விமான உற்பத்தி நிறுவனமான Boeing இற்கு ஒரு சவாலாக இருக்கும். அதனால் அமெரிக்க அரசியல் இந்த இணைவை தடுக்க முனையலாம். பொருளாதார பார்வையில் இந்த இணைவு நியாயமானதாக தோண்றினாலும் அரசியல் உலகில் ஆபத்தான முன்னெடுப்பாகும். BAE அமெரிக்காவில் 40,000 ஊழியர்களை கொண்டுள்ள வேளை EADS 3,000 ஊழியர்களை மட்டுமே கொண்டுள்ளது. அதற்கமைய அமெரிக்காவில் BAE இன் கடந்த வருடம் வருமானம் US$ 14.4 பில்லியன் ஆக இருக்க EADS இற்கு அமெரிக்க வருமானம் $ 1.4 பில்லியன் ஆக இருந்தது.

அண்மையில் அமெரிக்க இராணுவத்தின் பாவனைக்காக ஆகாயத்தில் வைத்தே யுத்த விமானம்களுக்கு எரிபொருள் நிரப்பக்கூடிய 179 விமானம்களை (refueling planes) தயாரிக்கும் வாய்ப்பை EADS இழந்திருந்தது. அந்த வாய்ப்பு Boeing நிறுவனத்துக்கு கிடைத்தது.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற மேற்கு நாடுகள் பாரிய அளவில் இராணுவ செலவுகளை குறைப்பதால் இவ்வாறான இராணுவ தளபாட உற்பத்தி நிறுவனம்கள் இணைய நிர்ப்பந்திக்கப்படுள்ளன.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS