Socialize

வெலிக்கடையில் வன்முறை, 13 பேர் வரை பலி

 

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் வியாழன் இரவு தொடங்கிய சிறைச்சாலை வன்முறைக்கு சுமார் 13 பேர்வரை பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வன்முறையை அடக்க இராணுவத்தை வரவழைக்கப்பட்டுள்ளது. சிறைக்கைதிகள் சிறை பாதுகாவலர்களின் பாவனைக்கு வைக்கப்பட்டிருந்த பல துப்பாக்கிகளை கையாடி இந்த வன்முறையில் ஈடுபடுள்ளனர். சுமார் 2000 படையினர் கவச வாகங்களின் உதவியுடன் நிலைமையை கடுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கின்றனர்.

STF என்ற விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலையினுள் போதைப்பொருள் மற்றும் தொலைபேசி போன்றன சம்பந்தமான தேடுதல் வேட்டை நடாத்திய போதே இந்த வன்முறை ஆரம்பமாகியுள்ளது என அறியப்படுகிறது.

இந்த சிறையில் சில முன்னாள் புலி உறுப்பினர்களும் அடைக்கப்பட்டு இருப்பினும் அவர்களும் இந்த வன்முறையில் ஈடுபட்டார்களா என்பது உடனடியாக தெரியவில்லை. சில கைதிகள் தப்பி ஓடியிருக்கலாம் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS