Socialize

வேலைத்தளங்களில் வழங்கும் (இனாம்) கையடக்க உபகரணங்கள் உதவியா உபத்திரமா?

சிவா ஈஸ்வரமூர்த்தி

இப்போதெல்லாம் அதிகமான வேலைத் தளங்களில் எதாவது ஒரு கையடக்க உபகரணம் (Mobile Device) ஒன்றை அல்லது பலதை அந்தக் கம்பனிகள் எங்களின் வேலைப் பணிக்கு என வழங்குவார்கள். கூடவே அவ் உபகரணங்களை நாங்கள் எங்களுடனேயே எப்போதும் வைத்திருக்க அனுமதிப்பார்கள். வேலை முடிந்த பின்பு அவற்றை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதிப்பார். இது ஒரு வகையில் அவ் உபகரணங்களை எங்கள் தனிப்பட்ட பாவனைகளுக்கு உபயோகிப்பதை மறை முகமாக அனுமதிப்பது போன்ற செயற்பாடும் ஆகும். ஆனால் கம்பனியின் வருடாந்த கொள்கை(ளை) விளக்க கூட்டத்தில் கம்பனியின் சொத்துக்கள் கம்பனியின் தேவைக்காக மட்டும் பாவிக்கப் பட வேண்டும் என்றும் சொல்லி வைப்பார்கள். பல வேலைத் தளங்களில் எங்களிடம் வருடா வருடம் இது போன்ற விடயங்களுக்காக ஒப்பந்த கையொப்பமும் பெற்று கொள்வார்கள். அதுதான் PA(Personal Assesment) என்று ஆரம்பித்து இறுதியில் ஒரு சிறிய பெரிய எழுத்துக்கள் அடங்கிய பத்திரத்தில் கையொப்பம் பெறுதல் ஆகும்.

இந்த வருடம் சம்பள உயர்வு கொடுக்க முடியாமல் இருக்கின்றது. காரணம் உலக பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது (இந்த சந்திப்பின் ஆரம்பத்தில் எங்கள் கம்பனி போன வருடத்தை விட இம் முறை 40மூ இலாபத்தில் வளர்ச்சி கண்டுள்ளது என்பதை பெருமையுடன் அவர்கள் கூறியதை நீங்கள் மறந்தும் விடுவீர்கள் அல்லது மறந்தது போல் பாசாங்கு செய்வீர்கள் என்பது வேறு விடயம்) என்று ஆரம்பித்து இறுதியில் ஒரு பத்திரத்தில் கையொப்பம் வாங்குவதை குறிப்பிடுகின்றேன். கூடவே உங்கள் வாயை அடக்க நீங்கள் அதிஷ்டமானவர் ஏனெனில் உங்களுக்கு ஆகக் குறைந்தது வேலையாவது இருக்கின்றது என்ற மறைமுக வெருட்டலுடன் கூடிய சம்பள உயர்வு மறுப்பு வேறு சொல்லி வைப்பார்கள். (எங்களால்தான் என்ன செய்ய முடியும். வீட்டுக்கடன், கார், கடன், காப்புறுதி கொடுப்பனவு என்று திரையில் எல்லாச் செலவுகளும் ஓடி மறையும் ஒரு கணத்தில்)

நாங்களும் கம்பனி வழங்கிய இந்த நடமாடும் பொருட்களை பெருமையுடன் நண்பர்கள், உறவினர்களுடன் (ஏன் முடிந்தால் ஊருக்கு போன் போட்டு) தம்பட்டம் அடிக்காத குறையாக சொல்லத்திரிவோம். கம்பனி எனக்காக எனது சொந்த பாவனைக்கும் அனுமதித்து இதைத் தந்திருக்கின்றது என்று. கூடவே கம்பனி இதற்காக மேலதிக காசு ஏதும் அறவிடாமல் இனாமாக தந்திருக்கின்றார்கள் என்போம்.

ஆனால் நாம் ஒன்றை மறந்து விட்டோம் எமக்கு வழங்கும் இந்த நடமாடும் கருவிகள் பல வேளைகளில் எம்மிடம் இருந்து சம்பளம் இல்லா வேலையை வாங்கிக் கொள்கின்றது என்பதை.
இந்த இனாம் நடமாடும் கருவி ஒரு தொலைபேசி ஆக இருப்பின் 1 தொடக்கம் 2 மணி வரைக்குமான வேலையை இனாமாக நாளொன்றிற்கு கம்பனி எம்மிடமிருந்து பெற்று விடும். இதேபோல் புத்திசாலித் தொலைபேசி ( (Smart Phone ie Black berry IPhone போன்றவை) ஆக இருப்பின் 2 தொடக்கம் 4 மணி வரைக்குமான வேலையை இனாமாக நாளொன்றிற்கு கம்பனி எம்மிடமிருந்து பெற்று விடும். மடிக் கணணி (Laptop or IPad) ஆக இருப்பின் 4 தொடக்கம் 6 மணி வரைக்குமான வேலையை இனாமாக நாளொன்றிற்கு கம்பனி எம்மிடமிருந்து பெற்று விடும். இதை சீர்தூக்கிப் பார்க்க தவறி விடுகின்றோம்.

வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தை இலாபம் ஒன்றே ஒரு நோக்கமாக கொள்ளும் கம்பனிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இவ்வாறு எங்கள் ஊதியமற்ற உழைப்பைத் திருடும் விடயத்தை எவ்வாறு தவிர்க்கலாம்.

முதலாவது. அந்த பொருட்களை முடிந்தளவிற்கு வேலை முடிந்து வீடடிற்கு கிளம்பும் போது வேலைத்தளத்திலேயே வைத்து விட்டுவருதல். அப்படியான சாத்தியப்பாடுகள் இல்லாவிடின் வீட்டிற்கு கொண்டு வந்ததும் அவற்றை (Power Off) செய்து வைத்தல் வேண்டும். மீண்டும் வேலைக்கு புறப்படும் போது மட்டும் Power on செய்யவும். இந்த இரண்டு முறமைகளும் முடியாவிடின் குறிப்பிட்ட நேரம் தவிர்த்து ஏனைய ஓய்வு நித்திரை நேரங்களிலாவது பாவனைக்கு இல்லாமல் (Power Off) வைத்திருத்தல் வேண்டும். இதுவும் முடியாவிட்டால் உங்கள் நிலமை மோசம் தான். 8 மணி நேரத்திற்கான சம்பளத்தை பெற்றுக் கொண்டு ஏனைய மேலதிக நேரத்தை இனாமாக செய்து கொடுக்க வேண்டியது தான்.

இவற்றிகு அப்பால் விஞ்ஞான வளர்ச்சியினால் கிடைத்த இப் பொருட்கள் மனித வாழ்வுக்கு இடைஞ்சலா அல்லது ஒத்தாசையா என்றால் இரண்டும் என்பதே பதில். இவ் உபகரணங்களை நாம் எவ்வாறு பாவிக்கின்றோம் என்பதைப் பொறுத்ததே அது அமைகின்றது. இவ் உபகரணங்களுக்கு நாம் அடிமை என்றால் அவை உபத்திரவமே. இவை எம் கட்டுப்பாட்டிற்குள் இருக்குமாயின் இவை எமக்கு உதவியாக அமையும். இது Cell Phone, Smart Phone, Laptop, IPad போன்ற எல்லாவற்றிற்கும் பொருந்தும்.

ஆனால் எம்மில் பலர் இவற்றிற்கு அடிமையாக இருப்பதே கவலைக்குரிய விடயம். மனிதர்கள் மனிதர்களுடன் நேரடியாக கதைத்து பேசி ஏசி அழுது சிரிந்து மகிழ்ந்து காதலித்து கட்டித் தழுவி உணர்வுகளைப் பரிமாறும் (Social Life) வாழ்வை இழந்து நிற்கின்றோம். கண்களால் பேசுவதையும் ஸ்பரிச உணர்வை பலர் மறந்து போய் இருக்கின்றோம். பல இளைஞர்களிடமே இந்த கண்களால் பேசுதல் ஸ்பரிசம் போன்ற விடயங்கள் இந்த social life ஆல் அருகி வருகின்றன என்பதை நன்று ஊன்றி அவதானித்தால் அறிய முடியும். வுhழ்வைத் தொலைத்த இயந்திரங்களாக மாறி வருகின்றோம். இவற்றிலிருந்து நாம் மீள வேண்டுமாயின் நாம் இவ் இயந்திர தொடர்பு சாதங்களுக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும்.

நம்மில் பலர் Busy busy என்று நேரம் இன்மை என்று அலைந்து திரிதலுக்கும் இந்த உபகரணங்கள் ஒரு வகையில் காhரணமாக அமைகின்றன. எனவே இந்த உபகரணங்கள் எங்களை அடிமைப்படுத்தும் நிலையிலிருந்து நாம் மீண்டு வாழ்வை ரசிப்போம், தொலைந்து போகும் வாழ்வை மீட்போம் என உறுதி பூண்போம்.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS