Socialize

19 வயதிற்கு உட்பட்டவருக்கான கிரிக்கட் போட்டியில் இந்தியா சம்பியன் ஆனது


19 வயத்திற்கு உட்பட்வர்களுக்கான இற்கான உலக கிரிக்கெட் போட்டி Tony Ireland Stadium, Townsville, Queensland. Australia இல் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா, அவுஸ்திரேலிய அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. இதில் முதலில் துடுப்பெடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி முதலில் தடுமாறிய போதும் இறுதியில் தரமான ஆட்டத்தின் மூலம் 8 விக்கெற் இழப்பிற்கு 225 ஓட்டங்களை 50 ஓவர்களில் எடுத்தது. இதற்கு பதிலளித்த இந்திய அணி ஆரம்பத்தில் சிறப்பாக துடுப்பெடுத்தடியது.

ஆனால் இடைநிலை ஆட்டக்காரர்கள் தடுமாற்றம் அடைந்தனர. இதனால் ஓட்ட விகிதம் சரிந்து சென்றது. ஒரு நிலையில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 225 ஓட்ட இலக்கை அடைவது கடினம் என்ற நிலைக்கு துடுப்பாட்டத்தில் தடுமாறியது.

ஆனால் இந்தியாவின் கப்டன் சான்ந் இன் சதத்துடன் கூடிய சிறப்பாட்டம் 14 பந்துகள் மீதி இருக்க 4 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை அடைந்தது. இதன் மூலம் இந்தியா 19 வயதுக்குள்பட்டவர்களுக்கான உலக கிரிகெட் கிண்ணத்தை நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலியாவிடம் இருந்து தட்டிப்பறித்துக் கொண்டது. ஆட்டநாயகனாக சதம் அடித்த இந்திய கப்டன் சன்ந் தெரிவு செய்யப்பட்டார்.

சிவா ஈஸ்வரமூர்த்தி

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS